வேளச்சேரி - தரமணி சாலை மூடுகால்வாய் அடைப்புகளை சீரமைப்பதில் சிக்கல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அடையாறு : வேளச்சேரி - தரமணி சாலை மூடு கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்து, பருவமழையின் போது தடையின்றி தண்ணீர் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வேளச்சேரி ஏரி உபரி நீர், பகிங்ஹாம் கால்வாய் செல்ல, விஜய நகர் சந்திப்பில் இருந்து, தரமணி 100 அடி அகல சாலை வழியாக, 18 அடி அகலம், 7 அடி ஆழம், 3.5 கி.மீ., துாரத்தில், வேளச்சேரி - தரமணி சாலை மூடு கால்வாய் அமைக்க, 35
 வேளச்சேரி - தரமணி சாலை மூடுகால்வாய் அடைப்புகளை சீரமைப்பதில் சிக்கல்

அடையாறு : வேளச்சேரி - தரமணி சாலை மூடு கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்து, பருவமழையின் போது தடையின்றி தண்ணீர் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வேளச்சேரி ஏரி உபரி நீர், பகிங்ஹாம் கால்வாய் செல்ல, விஜய நகர் சந்திப்பில் இருந்து, தரமணி 100 அடி அகல சாலை வழியாக, 18 அடி அகலம், 7 அடி ஆழம், 3.5 கி.மீ., துாரத்தில், வேளச்சேரி - தரமணி சாலை மூடு கால்வாய் அமைக்க, 35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.பணி, 2011ம் ஆண்டு துவங்கியது. நிர்வாக குளறுபடி, வழித்தடத்தில் பாறை தகர்ப்பு போன்றவற்றால், பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன.பின், மீண்டும் 27 கோடி ரூபாய் ஒதுக்கி, பணி துவங்கியது. இருந்தும், அவசர அவசரமாக அரைகுறையாக பணி முடித்து, 2016ம் ஆண்டு, கால்வாய் பயன்பாட்டுக்கு வந்தது.அதன்பிறகு, வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள, மழை நீர் வடிகாலும், மூடு கால்வாயுடன் இணைக்கப்பட்டது.

இதனால், வேளச்சேரியில் வடியும், 60 சதவீத மழை நீர், மூடு கால்வாய் வழியாக பகிங்ஹாம் கால்வாய் செல்லும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.ஆனால், நீரோட்டம் பார்த்து மூடு கால்வாயை கட்டப்படவில்லை. பாறை தகர்த்த பகுதியில் இருந்து மழை நீர் பின்னோக்கி செல்வதால், 30 சதவீத மழை நீர் தான் பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது என, அப்பகுதி நலச்சங்கங்கள் கூறுகின்றனர்.இது ஒருபுறமிருக்க, தற்போது, பகிங்ஹாம் கால்வாயில் சந்திக்கும் பகுதியில், 30 சதவீத மழை நீர் செல்லாத வகையில் மூடுகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.அடர்த்தியாக புதர் வளர்ந்து, சகதி அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியானதால், இரவு நேரத்தில் கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன.

பகிங்ஹாம் கால்வாயில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பினால், அவை, மூடு கால்வாயில் திரும்பாத வகையில், 'சட்டர்' அமைக்கப்பட்டு உள்ளது.போதிய பராமரிப்பு இல்லாததால், சட்டர் துருபிடித்து, அசைக்க முடியாத நிலையில் உள்ளது. கடந்த மாதம், பருவ மழை துவங்கும்முன், கால்வாய்களை சீரமைக்க, மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.ஆனால், 3.5 கி.மீ., துாரமுள்ள மூடு கால்வாயை சுத்தம் செய்ய மதிப்பீடு தயாரிக்கவில்லை. மொத்தமுள்ள, 3.5 கி.மீ., துாரத்தில், துார் வார கட்டமைப்பு எங்கும் அமைக்காததால், அடைப்புகளை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பருவமழையின்போது வேளச்சேரி பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. மூடு கால்வாயை சீரமைக்க, பொதுப்பணித்துறையினர், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X