சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி: கோடநாடு சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடையும் தருணத்தில், தி.மு.க., அரசு அதை புதிதாக விசாரிக்க வேண்டுமென கூறுகிறது. தேர்தல் வாக்குறுதி அளித்ததற்காக எல்லாம் விசாரிக்க முடியாது. இதை சட்டப்படி செய்ய வேண்டும்.'டவுட்' தனபாலு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தமிழக அரசு மேற்கொள்ளும் இப்போதைய
 'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி: கோடநாடு சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடையும் தருணத்தில், தி.மு.க., அரசு அதை புதிதாக விசாரிக்க வேண்டுமென கூறுகிறது. தேர்தல் வாக்குறுதி அளித்ததற்காக எல்லாம் விசாரிக்க முடியாது. இதை சட்டப்படி செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தமிழக அரசு மேற்கொள்ளும் இப்போதைய நடவடிக்கை தான் உண்மையிலான, 'பழி' வாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ; இதற்காக, 'ரூம்' போட்டு யோசித்திருப்பரோ என்பன போன்ற பல, 'டவுட்'டுகள் வருகின்றன.

காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன்: தமிழக வேளாண் பட்ஜெட்டில், ரேஷன் கடைகளில் கருப்பட்டி மற்றும் பனை பொருட்களை விற்பது; பனைகளை வெட்ட தடை; தவிர்க்க முடியாத நிலையில் பனையை அகற்ற வேண்டும் என்றால், கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும், பனை மேம்பாட்டு இயக்கம் துவங்கி இருப்பதும் மிகவும் பாராட்டுக்குரியது.

'டவுட்' தனபாலு: பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்கள் விற்பனைக்கும் பல சீரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற பல அறிவிப்புகள், இதற்கு முன்பும் அறிவிக்கப்பட்டுள்ளன; செயல்படுத்தப்பட வில்லை. அதுபோலவே இதுவும் ஆகிவிடுமோ என்ற, 'டவுட்' பனை தொழிலாளர்களுக்கு உள்ளது. எனவே, உறுதியாக இவற்றை செயல்படுத்த வேண்டும்!

மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன்: சட்டசபை நிதிநிலை அறிக்கையின்போது, 'மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன் உதவியாளர் ஒருவருடன் மாநிலம் முழுதும் இயங்கும் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க முதல்வர் உத்தரவிட்டுஉள்ளார்' என, நிதியமைச்சர் வாசித்தார். ஆனால், மாற்றுத்திறனாளிகள் துறையின் அதிகாரிகளோ, 'அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை; அது தவறுதலான பதிவு' என மறுத்து வருகின்றனர்.

'டவுட்' தனபாலு: அட இப்படி வேற நடக்கிறதா... சட்டசபையில் பேசினால், அது தான் ஆதாரம். அதற்கு மேல் எந்த ஒப்புதலும் தேவையில்லை என்பரே; அந்த முறை மாறிப் போய் விட்டதா... போயும் போயும் அப்பாவி மாற்றுத்திறனாளிகள் விவகாரத்திலா விளையாடுவர்? இதை பார்க்கும் போது, மக்கள் வாயை அடைக்க, இந்த அரசு நிறைய, 'டெக்னிக்' வைத்துள்ளதோ என்ற, 'டவுட்' வருகிறது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
23-ஆக-202109:25:58 IST Report Abuse
duruvasar தகுதி வாய்ந்த மாற்றுதிரணாளிகளையும், அவர் உடன் செல்ல தகுதிவாய்ந்தவர்களையும் கண்டறிய ஒரு நிபுணர் குழு ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விரைவில் அமைக்க மாண்புமிகு. முதலமைச்சர் விரைவில் அறிவிப்பாரோ என்னவோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X