அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து வழிபாடு

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
திருவண்ணாமலை-ஆவணி அவிட்டமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து வழிபட்டனர். மனத் துாய்மைக்கு காயத்ரி, வாக்கு துாய்மைக்கு சரஸ்வதி, துாய்மையான செயலுக்கு சாவித்திரி தேவி, ஆகிய முப்பெரும் தேவியரை குறிக்கும் வகையில், ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடி வரும் நாளான ஆவணி அவிட்டத்தை, வேத விற்பன்னர்கள் கல்வி
அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து வழிபாடு

திருவண்ணாமலை-ஆவணி அவிட்டமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து வழிபட்டனர்.

மனத் துாய்மைக்கு காயத்ரி, வாக்கு துாய்மைக்கு சரஸ்வதி, துாய்மையான செயலுக்கு சாவித்திரி தேவி, ஆகிய முப்பெரும் தேவியரை குறிக்கும் வகையில், ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடி வரும் நாளான ஆவணி அவிட்டத்தை, வேத விற்பன்னர்கள் கல்வி திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

பூணுால் அணிபவர் மனம், வாக்கு மற்றும் செய்கையில் எந்நேரமும் துாய்மையுடன் இருக்க நினைவுபடுத்தும் வகையில் இவ்விழா எடுக்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் நேற்று, பிரம்ம தீர்த்த குளத்தில் நீராடி, புது பூணுால் அணிந்து வழிபாடு நடத்தினர். நுாற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X