சில வரி செய்திகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 23, 2021
Share
2 டன் அரிசி பதுக்கியவர் கைதுபொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. கோட்டூர் ரோடு சி.டி.சி., காலனி, வேணுபிள்ளை காம்பவுண்டில் உள்ள குடோனில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சோதனை நடத்தினர்.குடோனில் தலா 50 கிலோ கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது

2 டன் அரிசி பதுக்கியவர் கைதுபொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. கோட்டூர் ரோடு சி.டி.சி., காலனி, வேணுபிள்ளை காம்பவுண்டில் உள்ள குடோனில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சோதனை நடத்தினர்.

குடோனில் தலா 50 கிலோ கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த பிரபு ராம், 42என்பவரை கைது செய்தனர்.தி.மு.க.,வில் சேர்ந்த 5,000 பேர்ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க.,வினர் 5000 பேர், மாவட்ட வர்த்தக அணி செயலர் ஆற்காடு சாரதி தலைமையில், நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.

மின்வேலியில் சிக்கியவர் பலிஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த சின்னபேட்ட கானப்பள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ், 30; விவசாயி. இவர், நேற்று காலை இயற்கை உபாதைக்காக காட்டு பகுதிக்கு சென்றார். அங்கு, அகரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், 37 நிலக்கடலை தோட்டத்தை காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க, மின்வேலி அமைத்திருந்தார். இதையறியாத சுரேஷ், மின்வேலியில் சிக்கி பலியானார். உத்தனப்பள்ளி போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.

600 பைக் திருடிய 7 பேர் கைதுவேலுார்: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் சில மாதங்களாக பைக்குகள் திருட்டு அதிகரித்தது. ஏழு தனிப்படைகள் விசாரித்தன. இதில், வேலுார் பகுதியைச் சேர்ந்த 22 - 26 வயதுடைய ஏழு வாலிபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள், கடந்த மூன்று மாதங்களில், 600 பைக்குகளை திருடியதும்; அவற்றை குறைந்த விலைக்கு விற்று, பெங்களூரில் உள்ள ஓட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. சித்துார் போலீசார் நேற்று முன்தினம், வேலுாரில் பதுங்கியிருந்த ஏழு பேரை கைது செய்து, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.சாராய ஊறல் போட்ட மூவர் கைதுபெரம்பலுார்: அரியலுார் மதுவிலக்கு பிரிவு போலீசார், நேற்று க.பொய்யூர் உப்பு ஓடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருகே உள்ள சவுக்கு வயலில் சவுந்தர்ராஜன், 46; சுரேஷ், 36; சங்கர், 35 ஆகியோர் சாராய ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. சாராய ஊறல்களை அழித்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.

பஸ் கண்டக்டர் அடித்து கொலைதிருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே, பூஞ்சுத்தி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி, 45; திருப்புவனம் டிப்போவில் கண்டக்டர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பூங்குடிச்சாமி, 41 என்பவருக்கும் இடத்தகராறு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு, செல்லச்சாமி உணவு வாங்க திருப்புவனம் ஓட்டல் வாசலில் நின்றார். அங்கு வந்த பூங்குடிச்சாமி, கட்டையால் தலையில் தாக்கியதில் செல்லச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். திருப்புவனம் போலீசார், பூங்குடிச்சாமியை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X