தமிழ்நாடு

கலைந்தது ஓய்வு... கடந்தது தொய்வு: உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம்... இன்று முதல், திருப்பூர் 'முழு வேகம்' சாத்தியமாகும், வளர்ச்சி!

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:கடைகள் இரவு 10:00 மணி வரை இயங்க அனுமதி, சினிமா தியேட் டர்கள் திறப்பு என, இன்று முதல் ஊரடங்கில், பெரும் தளர்வுகள் அமலுக்கு வருவதால், திருப்பூர் மாவட்டம், இயல்பு நிலைக்கு திரும் பும்; மக்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றால், வளர்ச்சிப்பாதைசாத்தியமாகும்.திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள், மாலை நேரத்தில் போக்கு வரத்து நெரிசலுடன் காணப்படுவது
கலைந்தது ஓய்வு... கடந்தது தொய்வு: உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம்... இன்று முதல், திருப்பூர் 'முழு வேகம்' சாத்தியமாகும், வளர்ச்சி!

திருப்பூர்:கடைகள் இரவு 10:00 மணி வரை இயங்க அனுமதி, சினிமா தியேட் டர்கள் திறப்பு என, இன்று முதல் ஊரடங்கில், பெரும் தளர்வுகள் அமலுக்கு வருவதால், திருப்பூர் மாவட்டம், இயல்பு நிலைக்கு திரும் பும்; மக்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றால், வளர்ச்சிப்பாதைசாத்தியமாகும்.

திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள், மாலை நேரத்தில் போக்கு வரத்து நெரிசலுடன் காணப்படுவது வழக்கம்; கடந்த இரண்டு வாரமாக, மாலையுடன் கடைகள் அடைக்கப்பட்டதால், முழு ஊரடங்கு போன்று காட்சியளித்தது.விதிமுறை மீறி இயங்கிய கடைகள் மீது, மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அபராதம் விதித்ததால், மாலை நேர ஊரடங்கு முழுமையாக பின்பற்றப்பட்டது. இன்று காலை, 6:00 மணியுடன், தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.

இனி, இரவு, 10:00 மணி வரை கடைகள் இயங்கலாம்.ஏற்கனவே பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள், முழு வேகத்தில் உற்பத்தியைத் துவக்கியுள்ளன. ஐந்து மாதங்களுக்கு பிறகு, திருப்பூர் நகரின் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றால், வளர்ச்சிப்பாதை சாத்தியமாகும்.

தயாராகும் பள்ளிகள்

வரும் செப்., 1 முதல் பள்ளிகளில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் துவங்குகின்றன. முன்னதாக, பணியாளர், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை சுத்தப்படுத்தி, திறக்க தயாராகும்படி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தியேட்டர்கள்

சினிமா தியேட்டர்கள், சில மாதங்களாக மூடப்பட்டிருப்பதால், பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இன்று முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன், சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.தியேட்டர் வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

திருப்பூரில், மல்டிபிளக்ஸ் தியேட்டர் உட்பட ஒரு சில தியேட்டர்கள் இன்றே திறக்கப்படுகின்றன; இரண்டு, மூன்று தினங்களில், அனைத்து தியேட்டர்களும் செயல்பட உள்ளன.எச்சரிக்கையாக இருங்கள்!கலெக்டர் வினீத் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தாலும், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அரசு தளர்வு வழங்கியுள்ள நிலையில், பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.வாகன பிரசாரம்மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், கொரோனா தொற்று, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, ஆட்டோக்கள் மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யவும், விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, ஜவுளிக்கடைகள், மருத்து வமனைகள், ஓட்டல் உட்பட, மக்கள் வந்து செல்லும் பகுதிகளில், 'சானிடைசர்', கை கழுவும் வசதி செய்யப்படவில்லை என புகார் வந்துள்ளது. தொழிற்சாலைகளில், போதிய அளவு சானிடைசர் வைக்க வேண்டும்.கை கழுவுவது, உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தவறினால், பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளோம். தளர்வுகளால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல், கொரோனா தொற்றை முழுமையாக ஒழித்துக்கட்ட முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X