பொது செய்தி

தமிழ்நாடு

குமரியில் இருந்து டில்லிக்கு போலீசார் சைக்கிள் பேரணி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
நாகர்கோவில்--கன்னியாகுமரியில் இருந்து டில்லி செல்லும், மத்திய ரிசர்வ் போலீசாரின் சைக்கிள் பேரணி நேற்று துவங்கியது.இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, கன்னியாகுமரியில் இருந்து டில்லி வரை, மத்திய ரிசர்வ் போலீசாரின் சைக்கிள் பேரணி நேற்று துவங்கியது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.பேரணியில்

நாகர்கோவில்--கன்னியாகுமரியில் இருந்து டில்லி செல்லும், மத்திய ரிசர்வ் போலீசாரின் சைக்கிள் பேரணி நேற்று துவங்கியது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, கன்னியாகுமரியில் இருந்து டில்லி வரை, மத்திய ரிசர்வ் போலீசாரின் சைக்கிள் பேரணி நேற்று துவங்கியது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.பேரணியில் பங்கேற்றுஉள்ள 36 வீரர்கள், 2,850 கி.மீ., பயணித்து, காந்தி பிறந்த நாளான அக்., 2ல் டில்லி ராஜ்காட்டில் நிறைவு செய்கின்றனர்.சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன் நினைவிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக செல்வர்.துவக்க விழாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் கர்நாடக டி.ஜி.பி., சிந்தியா, திருவனந்தபுரம் டி.ஐ.ஜி., ராதாகிருஷ்ணன்,குமரி கலெக்டர் அரவிந்த், எஸ்.பி., பத்ரி நாராயணன், எம்.பி.,க்கள் விஜய் வசந்த், விஜயகுமார், பிரின்ஸ் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X