டீ கடை பெஞ்ச்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

டீ கடை பெஞ்ச்

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
ஜாதி துவேஷத்தில் ஓரங்கட்டப்படும் தி.மு.க., சேர்மன்!''கான்ட்ராக்டரை, 'பிளாக் லிஸ்ட்'ல சேர்க்கணும்னு சொல்றா ஓய்...'' என, பில்டர் காபியை பருகியபடியே, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''வேலைகளை சரியா முடிக்காத கான்ட்ராக்டரைத் தானே அப்படி செய்வாவ... நீரு யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கான்ட்ராக்டர், திருப்பூர் உட்பட
 டீ கடை பெஞ்ச்

ஜாதி துவேஷத்தில் ஓரங்கட்டப்படும் தி.மு.க., சேர்மன்!
''கான்ட்ராக்டரை, 'பிளாக் லிஸ்ட்'ல சேர்க்கணும்னு சொல்றா ஓய்...'' என, பில்டர் காபியை பருகியபடியே, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''வேலைகளை சரியா முடிக்காத கான்ட்ராக்டரைத் தானே அப்படி செய்வாவ... நீரு யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கான்ட்ராக்டர், திருப்பூர் உட்பட பல மாவட்டங்கள்ல, நெடுஞ்சாலைத் துறை பணிகளை எடுத்து செய்யறார்... சாலை விரிவாக்கம், புதுப்பிப்பு பணிகளை, குறித்த காலத்துல முடிக்காம இழுத்தடிக்கறார் ஓய்...''ஆனாலும், அதிகாரிகளை கவனிச்சு 'பில்' பணத்தை மட்டும் 'கரெக்டா' வாங்கிடறார்... இவரிடம் கை நீட்டிய அதிகாரிகள், இவர் முடிக்காத பணிகளை, வேற சின்ன கான்ட்ராக்டர்களை வச்சு முடிச்சுடறா... ''அவா முடிச்ச பணிகளுக்கு, பணம் தராம நாமக்கல் கான்ட்ராக்டர் அலைய விடறார் ஓய்...''இவரால, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை மேம்பாட்டு பணி முடங்கி கிடக்கறது... இதனால, 'அவரை பிளாக் லிஸ்ட்ல சேர்க்கணும்'னு, நேர்மையான அதிகாரிகள் பலரும் சொல்றா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''கணேசன், இந்த பேப்பரை அங்கன வையும்...'' என்ற அண்ணாச்சியே, ''பைல்கள் அரசு அலுவலகங்கள்ல துாங்கிட்டு இருக்கு வே...'' என்றார்.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''கொரோனா நெறிமுறைகளால, கோவில்கள்ல கும்பாபிஷேகம் நடத்த தடை விதிச்சிருந்தாவ... இப்ப, தொற்று குறைந்து, நிறைய தளர்வுகளை அரசாங்கம் குடுத்திருக்குல்லா...''இதனால, 'திருப்பணி முடிந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்படும்'னு, அமைச்சர் சேகர்பாபுவும் சமீபத்துல அறிவிச்சாரு வே...''ஆனா, மாவட்ட அளவுல, பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட பைல்கள், அறநிலையத் துறையின் இணை, உதவி ஆணையர் அலுவலகங்கள்ல தேங்கி கிடக்காம்... இதனால, பக்தர்கள் எல்லாம் விரக்தியில இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''ஒன்றிய சேர்மனை ஓரங்கட்டியே வச்சிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மனா, தி.மு.க.,வைச் சேர்ந்த உண்ணாமலை குணசேகரனும், துணை சேர்மனா அருணா இளஞ்செழியனும் இருக்காங்க... ''ஒன்றியக்குழு கூட்டத்துல, துணைத் சேர்மன் அருணாவுக்கு பதிலா, அவங்க கணவர் இளஞ்செழியன் தான் பங்கேற்கிறாருங்க...''கூட்ட தீர்மானங்கள் எல்லாத்தையும், சேர்மனுக்கு தெரிவிக்காமலே நிறைவேத்திடுறாங்க... துணை சேர்மனின் கணவருக்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் சித்தார்த்தன், பி.டி.ஓ., கணேசன் எல்லாரும் உடந்தையா இருக்காங்க...''ஏன்னா, இவங்க மூணு பேருமே ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்க... சேர்மன், பழங்குடி இன மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்தவரா இருக்கிறதால, அவரை யாரும் மதிக்க மாட்டேங்கிறாங்க... 'அரசு நிகழ்ச்சிகள் எதையும், என்னிடம் பி.டி.ஓ., சொல்றதே இல்லை'ன்னு, கட்சியினரிடம் சேர்மன் புலம்பிட்டு இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.''ம்... 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' எல்லாம் வெறும் ஏட்டுல தான் இருக்குது பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X