பொது செய்தி

தமிழ்நாடு

தி.நகரில் 'முரளிஸ் மார்க்கெட்' திறப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை : தி.நகர் : சென்னை தி.நகரில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'முரளிஸ் மார்க்கெட்' நேற்று திறக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், இதுவரை இனிப்பு மற்றும் காரம் விற்பனையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வந்தது.தற்போது உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை நிலையமான, முரளிஸ் மார்க்கெட்டை
 தி.நகரில் 'முரளிஸ் மார்க்கெட்' திறப்பு

சென்னை : தி.நகர் : சென்னை தி.நகரில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'முரளிஸ் மார்க்கெட்' நேற்று திறக்கப்பட்டது.

சென்னையில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், இதுவரை இனிப்பு மற்றும் காரம் விற்பனையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வந்தது.தற்போது உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை நிலையமான, முரளிஸ் மார்க்கெட்டை நேற்று முதன்முறையாக துவங்கியது.தி.நகர், வெங்கட் நாராயணன் சாலையில் அமைந்துள்ள முரளிஸ் மார்க்கெட்டை, சென்னை ஓட்டல் சங்க புரவலர் ராமதாஸ் ராவ் மற்றும் ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இங்கு வரும் மக்கள், தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகளை அவர்களே பார்த்து எடுத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், சாம்பார் சாதம், மிக்சர் பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, 'ப்ரஷ் ஜூஸ்' வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X