பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் 'கண்ணாமூச்சி': வியாபாரிகள் குற்றச்சாட்டு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், கடந்த சில நாட்களாக பிரதான ரோடான குமரன் ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. கோர்ட் ரோடு, குமரன் ரோடு, சபரி சாலை சந்திக்கும் பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல், முக்கியமான பண்டிகை காலம், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் போது மட்டும்
 போலீஸ் 'கண்ணாமூச்சி': வியாபாரிகள் குற்றச்சாட்டு

திருப்பூர்:திருப்பூரில், கடந்த சில நாட்களாக பிரதான ரோடான குமரன் ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. கோர்ட் ரோடு, குமரன் ரோடு, சபரி சாலை சந்திக்கும் பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல், முக்கியமான பண்டிகை காலம், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் போது மட்டும் இந்த குறுக்கு வீதியில் உள்ள ரோட்டை 'பேரிகார்டு' கொண்டு திடீர் தடுப்புகளை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்துகின்றனர்.போராட்டம் செய்ய ஆயத்தம்சபரி சாலையை சேர்ந்த வியாபாரிகள் சிலர் கூறுகையில், ''மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு, அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, நிரந்தர தீர்வு ஏற்படுத்த போலீசார் முன்வருவதில்லை.போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை காரணமாக, துணி மற்றும் வணிக நிறுவனங்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.திருப்பூர் மாநகர போக்கு வரத்து உதவி கமிஷனர் கொடிச்செல்வம் கூறுகையில், ''குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள் கடந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் மட்டும், சபரி சாலை அடைக்கப்படும். அதன்பின், திறந்து விடப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X