சுடு சாம்பலில் படுகாயம்: பள்ளி சிறுவன் பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுடு சாம்பலில் படுகாயம்: பள்ளி சிறுவன் பரிதாப பலி

Added : ஆக 23, 2021
Share
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் ஏரியில் கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில் சுடு சாம்பலால் பலத்த தீக்காயமடைந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் வெங்கடேஷ், 14; ஒன்பதாம் வகுப்பு படிந்த வந்தார்.ஜூலை 24ம் தேதி ஏமப்பேர் ஏரிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில்

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் ஏரியில் கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில் சுடு சாம்பலால் பலத்த தீக்காயமடைந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் வெங்கடேஷ், 14; ஒன்பதாம் வகுப்பு படிந்த வந்தார்.ஜூலை 24ம் தேதி ஏமப்பேர் ஏரிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில் சுடு சாம்பலில் தெரியாமல் கால் வைத்தபோது, இரு கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 30ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இறந்தார்.கந்தசாமி புகாரின்படி, கள்ளக்குறிச்சி போலீசார், ஏரியில் சுடு சாம்பலைக் கொட்டிய சிவா மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.சுடு சாம்பலை கொட்ட பயன்படுத்திய டிராக்டர், டிப்பரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X