சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறிப்பு: 'டுபாக்கூர்' போலீஸ் கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-போலீஸ் எனக் கூறி, காதல் ஜோடிகளிடம் நகை பறித்த கடலுார் ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் போலீஸ் எனக் கூறி, தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகள் மற்றும் திருமணமான தம்பதியரை மிரட்டி, நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.குற்றவாளியை கண்டு பிடிக்க தனிப்படை அமைத்து, எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.பல்வேறு இடங்களில்
 நகை பறிப்பு: 'டுபாக்கூர்' போலீஸ் கைது

விழுப்புரம்-போலீஸ் எனக் கூறி, காதல் ஜோடிகளிடம் நகை பறித்த கடலுார் ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் போலீஸ் எனக் கூறி, தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகள் மற்றும் திருமணமான தம்பதியரை மிரட்டி, நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.குற்றவாளியை கண்டு பிடிக்க தனிப்படை அமைத்து, எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.பல்வேறு இடங்களில் பதிவான, 'சிசிடிவி' காட்சிகள் மற்றும் குற்ற வாளிகள் பட்டியலை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதன்படி, பல வழக்குகளில் தொடர்புடைய கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பான்குளத்தைச் சேர்ந்த சிவராமன், 42, என்பவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், சிவராமன் போலீஸ் எனக் கூறி பல காதல் ஜோடிகள் மற்றும் திருமணமான தம்பதியரிடம் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.சிவராமனை கைது செய்து, 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X