தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி பூமி பூஜை விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி பூமி பூஜை விழா

Added : ஆக 23, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி கல்வி அறக்கட்டளை சார்பில், வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் புதிதாக தெற்கு ரோட்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி கட்டப்பட உள்ளது. இதற்காக பூமி பூஜை விழா நேற்று நடந்தது.கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜன், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் வரதராஜன்,
 தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி பூமி பூஜை விழா

திருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி கல்வி அறக்கட்டளை சார்பில், வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் புதிதாக தெற்கு ரோட்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி கட்டப்பட உள்ளது. இதற்காக பூமி பூஜை விழா நேற்று நடந்தது.கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜன், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் வரதராஜன், ஆலோசகர் நாராயணசாமி, எவரெடி உரிமையாளர் சுப்ரமணியம், மூத்த நிர்வாகி சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறுகையில், 'ரோட்டரி துவக்கப்பள்ளி உள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிக்கான கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது.விரைவில் நடுத்தர மக்களுக்கு குறைந்த கல்வி கட்டணத்தில், தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X