காருடன் கிணற்றில் விழுந்தவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காருடன் கிணற்றில் விழுந்தவர் பலி

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
ஆற்காடு-ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்தவர் கோபி, 40; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றியவர், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார்.இவருக்கு சொந்தமான நிலம், ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் உள்ளது. நேற்று மதியம் 3:30 மணிக்கு 'ஸ்கார்பியோ' காரில், கோபி, மனைவி மஞ்சுளா, 34, நண்பர் தினேஷ், 33, மற்றும் இரண்டு குழந்தைகளோடு சென்றனர்.காரை, கோபி ஓட்டினார்.நிலத்தில் மனைவி,

ஆற்காடு-ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்தவர் கோபி, 40; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றியவர், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார்.இவருக்கு சொந்தமான நிலம், ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் உள்ளது. நேற்று மதியம் 3:30 மணிக்கு 'ஸ்கார்பியோ' காரில், கோபி, மனைவி மஞ்சுளா, 34, நண்பர் தினேஷ், 33, மற்றும் இரண்டு குழந்தைகளோடு சென்றனர்.காரை, கோபி ஓட்டினார்.நிலத்தில் மனைவி, குழந்தைகளை இறக்கி விட்டு, காரை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்த பின்னோக்கி எடுத்தார். காரில் தினேஷ் இருந்தார்.அப்போது வேகமாக பின்னோக்கி சென்ற கார் அருகில் இருந்த 150 அடி ஆழ தரை கிணற்றில் விழுந்தது. இதில், நீரில் மூழ்கி கோபி இறந்தார். ஆற்காடு தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி, கோபியின் உடலை மாலை 6:00 மணிக்கு மீட்டனர்.நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இரவு 8:00 மணிக்கு காரில் சிக்கிய தினேஷ் உயிருடன் மீட்கப்பட்டார். கிணற்றில் விழுந்த காரை எடுக்க முடியவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X