சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆண் வேடம் பூண்ட சிறுமி அரும்பாக்கத்தில் பரபரப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அரும்பாக்கம் : 'டிக் டாக்' செய்ய ஆண் வேடம் பூண்டு, தனியார் பள்ளி வளாகத்தில் விடிய விடிய ஆண் நண்பர்களுடன் அரட்டையடித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.புரசைவாக்கம், தாண்டவன் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன், 40. அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிகிறார்.நேற்று காலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில், சிறுமியர்கள்

அரும்பாக்கம் : 'டிக் டாக்' செய்ய ஆண் வேடம் பூண்டு, தனியார் பள்ளி வளாகத்தில் விடிய விடிய ஆண் நண்பர்களுடன் அரட்டையடித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.

புரசைவாக்கம், தாண்டவன் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன், 40. அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிகிறார்.நேற்று காலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில், சிறுமியர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின் அவர்களை பிடிக்க முற்பட்டபோது, மூவர் தப்பிச் செல்ல, ஒருவர் மட்டும் பிடிபட்டார்.பின், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், பிடிபட்டவர் ஆண் வேடத்திலிருந்த சிறுமி என்பது தெரியவந்தது. மேலும் ஐஸ்ஹவுஸ் மீர்சாகிப் பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அவரது ஆண் நண்பர்களான கார்த்திக், நிஜாம், தேவா ஆகியோருடன் 'டிக் டாக்' செய்வதற்காக, இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது தெரியவந்தது.தனியார் பள்ளி பஸ்சில், நள்ளிரவு முழுதும் நண்பர்களுடன் சிறுமி இருந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X