பொது செய்தி

இந்தியா

3வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா: எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பதில்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-இந்தியாவில் 3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பதற்கு எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பதிலளித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன.தற்போது

புதுடில்லி-இந்தியாவில் 3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பதற்கு எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பதிலளித்துள்ளார்.



latest tamil news


உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன.தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதால் முன்னெச்சரிக்கையாக 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக நாடுகள் ஆலோசிக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த முடிவெடுத்துள்ளன.


latest tamil news


இந்தியாவிலும் 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:இந்தியாவின் தரவுகள் அடிப்படையில் பார்த்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் தேவை என உணரவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் தற்போது முழுமையாக இல்லை. தரவுகள் வெளியான பிறகே அது குறித்து முடிவெடுக்கப்படும்.அதன்படி அடுத்த ஆண்டு துவக்கத்தில் பூஸ்டர் டோஸ் செயல்திறன் குறித்த தரவுகள் வெளியாகும். இருப்பினும் முடிந்தவரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பிறகே பூஸ்டர் டோஸ் குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
23-ஆக-202108:00:33 IST Report Abuse
duruvasar தடுப்பூசி போர்வையில் மாசு டெல்லிக்கு போய் சோலிய பார்க்க நல்ல வாய்ப்பு. இன்னும் எவ்வளவு நாளைக்குங்க சாக்கடை அடைப்பு, கிருமி நாசினி தெளிப்புன்னு பாத்துகிட்டு இருப்பாரு. அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டாமா ?
Rate this:
Perumal - Chennai,இந்தியா
23-ஆக-202111:54:54 IST Report Abuse
Perumalநீ போயி விளக்கு புடி....
Rate this:
Cancel
23-ஆக-202104:41:40 IST Report Abuse
அப்புசாமி நாமளா எதுவும் செய்யமாட்டோம் அமெரிக்க செஞ்சு தரவுகளைக் குடுக்கும். அப்புறம் நாம் கண்டுபிடிச்சு சொல்வோம்.
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
23-ஆக-202111:15:47 IST Report Abuse
Chandradas Appavooஉனது புத்தே அவளவுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X