அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கடன்கார ஆட்சி:தி.மு.க., மீது எச்.ராஜா சாடல்

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
பரமக்குடி--''தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடக்கிறது'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மேலும் கூறியதாவது:தி.மு.க.,வின் 100 நாள் சாதனை என்பது முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான். தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடக்கிறது. வரும் 6 மாதங்களில் மேலும் ரூ.92 ஆயிரம் கோடி கடன்
 தமிழகத்தில் கடன்கார ஆட்சி:தி.மு.க., மீது எச்.ராஜா சாடல்

பரமக்குடி--''தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடக்கிறது'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மேலும் கூறியதாவது:தி.மு.க.,வின் 100 நாள் சாதனை என்பது முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான். தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடக்கிறது. வரும் 6 மாதங்களில் மேலும் ரூ.92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக பட்ஜெட்டில் சொல்லியுள்ளனர். பட்ஜெட்டில் 58 ஆயிரம் கோடி பற்றாக்குறை கொடுத்துள்ளார்கள்.

நிதிப்பற்றாக்குறை என்பது பணவீக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அகவிலைப்படி கொடுக்க முடியாது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது தகுதியானவரை பார்த்து அறிந்து கொடுப்பதாக நிதி அமைச்சர் கூறுகிறார். 1967ல் தி.மு.க., கூறிய பொய் வாக்குறுதி மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏமாற்று பேர் வழிகளின் அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது. மாநில வருவாயில் 70 சதவீதம் சம்பளம், பென்ஷனுக்கு போகிறது. மீதம் 30 சதவீத வருமானத்தில் கடன் கட்ட முடியுமா. நிதியை திரும்ப அளிக்க முடியுமா. ஆகவே வருமானத்திற்கு மீறி கடன் வாங்கக்கூடாது. 2006 வரை வெறும் 28 ஆயிரம் கோடி மட்டுமே கடன் இருந்தது.

இலவச கலர் டி.வி., வழங்குவதாக கூறிய பிறகு தான் கடனளவு அதிகரிக்க துவங்கியது. ஆகவே பொறுப்புடன் அரசு செயல்படவில்லையெனில் தமிழகம் நாளை கடன் வாங்கும் தகுதியை இழக்கும்.இல.கணேசனுக்கு வாழ்த்துஇல.கணேசனும், நானும் 1975 முதல் ஆர்.எஸ்.எஸ்.,ல் பணியாற்ற துவங்கினோம். அவர் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். இன்று பா.ஜ., வேகமாக வளர நல்ல, தெளிவான தேசிய தலைமை இருப்பது தான் காரணம். மற்ற கட்சிகளுக்கு அதுஇல்லை. ஆகவே மிகப்பெரிய வளரும் கட்சியாக பா.ஜ., உள்ளது, என்றார்.----

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S - Erode,இந்தியா
24-ஆக-202110:43:22 IST Report Abuse
Venugopal S தங்கள் தானைத் தலைவர் மோடியின் ஒன்றிய அரசின் கடன் 119 லட்சம் கோடி என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தது உங்களுக்கு ஞாபகம் இல்லையோ. அதைப் பார்க்கும் போது தமிழக அரசின் கடன் குறைவு தான்.
Rate this:
Cancel
TamilReader - Dindigul,யூ.எஸ்.ஏ
24-ஆக-202100:14:43 IST Report Abuse
TamilReader காமெடி பீஸ் வந்து விட்டார் ADMK வாங்கிய 5 லட்சம் கோடி கடன் வாங்கியபோது, இந்த காமெடி பீஸ் ஏன் வாயை திறக்கலை?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
23-ஆக-202117:20:27 IST Report Abuse
DVRR சரியான தலைப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X