பொது செய்தி

இந்தியா

பராமரிப்பு மையங்களில் 721 குழந்தைகள் பாதிப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுடில்லி,-தமிழகம் உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தை கள் பராமரிப்பு மையங்களில் 721 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுதும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஏராளமான பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கொரோனா பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் தொடர்பாக, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு

புதுடில்லி,-தமிழகம் உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தை கள் பராமரிப்பு மையங்களில் 721 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுதும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஏராளமான பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கொரோனா பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் தொடர்பாக, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விபரங்கள் கோரப்பட்டன.

அவர்கள் அளித்த பதில் வருமாறு:தமிழகம், ஹரியானா, பீஹார், உத்தர பிரதேசம் உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பராமரிப்பு மையங்களில் 721 குழந்தைகள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். நடப்பாண்டில் அதிக பட்சமாக ஹரியானாவில் 288 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக தமிழகத்தில் 149; பீஹார் 131; மிசோரம் 46 குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாயினர். இதுவரையிலும் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X