பொது செய்தி

இந்தியா

மணிப்பூர் உணவு வகைகள்; மத்திய அமைச்சர் அறிமுகம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மணிப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ள ஏழு உணவு வகைகளை, மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிமுகம் செய்தார்.நம் நாட்டில் வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், அவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து வினியோகிப்பதை மத்திய பா.ஜ., அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வடகிழக்கு

புதுடில்லி-'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மணிப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ள ஏழு உணவு வகைகளை, மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிமுகம் செய்தார்.



latest tamil news



நம் நாட்டில் வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், அவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து வினியோகிப்பதை மத்திய பா.ஜ., அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ள ஏழு உணவு வகைகளை, மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிமுகம் செய்துவைத்தார்.


latest tamil news



மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த இந்த அறிமுக நிகழ்ச்சியில், கறுப்பு அரிசியில் செய்யப்பட்ட லட்டு, கறுப்பு அரிசி பழம் மற்றும் உலர் பழங்களினாலான குக்கீஸ், காரமான பூஜியா தின்பண்டம் ஆகிய உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.மேலும், மரவள்ளிக் கிழங்கில் செய்யப்பட்ட பர்பி, பொரியில் செய்யப்பட்ட இனிப்பு, மூங்கில் தண்டில் செய்யப்பட்ட இனிப்பு, அத்திப் பழத்தில் தயாரிக்கப்பட்ட லட்டு உள்ளிட்ட ஏழு உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்த உணவு வகைகள், எம்.எப்.ஐ.சி.எல்., எனப்படும் மணிப்பூர் உணவு தொழிற்சாலை கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-202111:36:37 IST Report Abuse
vpurushothaman நம்மூருத் தலைவர் இல.கணேசன் ஐயா ஆளுநரானதை வரவேற்கப் பலகாரங்கள் தயார். ரசித்தோம் - ருசிக்க ஏதாவது வழி காடடுங்களே ?
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
23-ஆக-202110:13:59 IST Report Abuse
Mahalingam Laxman மணிப்பூர் உணவு வகைகள் மணிப்பூரில் அறிமுகம் செய்து என்ன பயன் மத்ராஸில் கிடைக்கும்படி செய்தாள் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X