பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கை விட கூடுதல் பயிர் கடன் வனத்துறை அமைச்சர் உறுதி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
குன்னுார்:''விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக பயிர் கடன் வழங்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் எடப்பள்ளி இளித்தொரை கிராமத்தில், கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில், விவசாய பயிர் கடன் வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடந்தது.பயனாளிகளுக்கு பயிர் கடன்

குன்னுார்:''விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக பயிர் கடன் வழங்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் எடப்பள்ளி இளித்தொரை கிராமத்தில், கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில், விவசாய பயிர் கடன் வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடந்தது.பயனாளிகளுக்கு பயிர் கடன் சான்றிதழ்கள் வழங்கி வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில்,''எடப்பள்ளிதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 12 கிராமங்களைக் சேர்ந்த, 5,115 உறுப்பினர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டில் சங்கத்தின் மூலம் பயிர் கடனாக, 5 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், விவசாயிககளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக பயிர் கடன் வழங்கப்படும். தற்போது, 341 பயனாளிகளுக்கு,3.29 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர் கடன்கள் வழங்கப்படுகிறது,'' என்றார்.கூட்டுறவு சங்க இணைபதிவாளர் வாஞ்சிநாதன், கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய கூட்டுறவு சங்க மேலாளர் ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X