நீதிபதி கொலை வழக்கு சூடு பிடிக்கும் விசாரணை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பாட்னா-ஜார்க்கண்டில் நீதிபதி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் திருட்டு மொபைல் போன்களை பயன்படுத்தியுள்ளதை சி.பி.ஐ., கண்டுபிடித்து உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், 49, சமீபத்தில் நடைபயிற்சி செய்த போது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஆட்டோ டிரைவர் லக்கன் வர்மா மற்றும் ராகுல் வர்மா ஆகிய இருவரை கைது செய்த உள்ளூர்

பாட்னா-ஜார்க்கண்டில் நீதிபதி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் திருட்டு மொபைல் போன்களை பயன்படுத்தியுள்ளதை சி.பி.ஐ., கண்டுபிடித்து உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், 49, சமீபத்தில் நடைபயிற்சி செய்த போது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஆட்டோ டிரைவர் லக்கன் வர்மா மற்றும் ராகுல் வர்மா ஆகிய இருவரை கைது செய்த உள்ளூர் போலீசார், விபத்து என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை ஏற்றது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆட்டோ திருடப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும், குற்றவாளி கள் பயன்படுத்திய மொபைல் போன்களும் திருடப்பட்டவை என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.நீதிபதியை கொலை செய்வதற்கு முதல் நாள் இரவு, ரயில்வே கான்ட்ராக்டர் புரனேந்து விஸ்வகர்மா என்பவரிடம் இருந்து மூன்று மொபைல் போன்களை திருடியுள்ளனர். விஸ்வகர்மா தன் போன்கள் திருடு போனது குறித்து போலீசில் புகார் செய்து உள்ளார்.

போலீசார் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. அதற்காக, கான்ஸ்டபிள் விஜய் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். கொலை செய்யப்பட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், மாபியா கும்பலின் வழக்குகள் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட கொலை வழக்கு ஆகியவற்றை விசாரித்து வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X