பொது செய்தி

தமிழ்நாடு

அலைபேசி'சுவிட்ச்ஆப்' : வாசிப்பை நேசிக்க புதிய முயற்சி

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி: மாணவர்களிடையே அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளதை தடுக்க சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அலைபேசியை ஒருநாள் முழுவதும் 'சுவிட்ச்ஆப்' செய்து, புத்தகம் படித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன் உட்பட 32 ஆசிரியர்கள், நேற்று முன்தினம் (ஆக.21ல்) ஒருநாள்
அலைபேசி'சுவிட்ச்ஆப்' : வாசிப்பை நேசிக்க  புதிய முயற்சி

தேவதானப்பட்டி: மாணவர்களிடையே அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளதை தடுக்க சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அலைபேசியை ஒருநாள் முழுவதும் 'சுவிட்ச்ஆப்' செய்து, புத்தகம் படித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன் உட்பட 32 ஆசிரியர்கள், நேற்று முன்தினம் (ஆக.21ல்) ஒருநாள் முழுவதும் புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வுக்காக தங்களது அலைபேசியை 'சுவிட்ச்ஆப்' செய்தனர். ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை குறைந்தது 5 மணி நேரம் புத்தகம் வாசித்து விழிப்புணர்வுஏற்படுத்தியுள்ளனர்.

ஆசிரியர்கள் இன்று முதல் (ஆக.23) தாங்கள் படித்த புத்தகத்திலிருந்து தினமும் இரண்டு ஆசிரியர்கள் தங்களது ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' குரூப்பில் புத்தகம் குறித்து பதிவிட உள்ளனர். ஆசிரியர்களின் புத்தகம் வாசிப்பு கூட்டு முயற்சி வெற்றியுடன் முடிந்ததால், பிற அரசு பள்ளி ஆசிரியர்களையும் இச்செயல் கவர்ந்துள்ளது. அவர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளனர்.

தலைமை ஆசிரியர் மோகன் கூறுகையில்: அலைபேசி பயன்பாடு அதிகரித்து, புத்தகம் வாசிப்பில் மாணவர்களது ஆர்வம் குறைந்து வருவதை தடுத்து, மாணவர்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் முன் மாதிரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X