பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகள் சேதம்: மக்கள் அச்சம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் குடியிருப்புகளை உடைத்து வருவதால், மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.பந்தலுார் அருகே, தேவாலா ஹட்டி, பாண்டியார் டான்டீ, ஆமை குளம், புளியம்பாறை, வாழவயல் பகுதிகளில், இரண்டு யானைகள் குடியிருப்புகள், கடைகளை தொடர்ச்சியாக உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்த

பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் குடியிருப்புகளை உடைத்து வருவதால், மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.பந்தலுார் அருகே, தேவாலா ஹட்டி, பாண்டியார் டான்டீ, ஆமை குளம், புளியம்பாறை, வாழவயல் பகுதிகளில், இரண்டு யானைகள் குடியிருப்புகள், கடைகளை தொடர்ச்சியாக உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்த யானைகளை விரட்டுவதற்கு கொண்டு வரப்பட்ட கும்கி யானைகள் திரும்பி சென்ற நிலையில், மீண்டும் இந்த இரண்டு யானைகளும், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆறுக்கும் மேற்பட்ட கடைகளை சேதப்படுத்தின. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேவாலா பிளாமூலா பகுதிக்கு வந்த, 2 யானைகளும் ராமையா, கதிர்வேலு, சிவமணி ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தி உள்ளன. பின்பு, அப்பகுதியில் இருந்த வாழை தோட்டத்தை சேதப்படுத்தின. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X