கால்வாய் சீரமைப்பு பணி இழுத்தடிப்பு: விரைவில் முடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் சீரமைப்பு பணி இழுத்தடிப்பு: விரைவில் முடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவு

Added : ஆக 23, 2021
Share
ஊட்டி:ஊட்டி, கோடப்பமந்து கால்வாய் பணியை இழுத்தடித்து வந்த கான்ட்ராக்டருக்கு, நகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளில் வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை மூலம் கோடப்பமந்து பிரதான கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. நகரிலிருந்து, 3 கி.மீ., துாரம் உள்ள சுத்திகரிப்பு நிலையம் வரை, இருப் புறம் கால்வாய்

ஊட்டி:ஊட்டி, கோடப்பமந்து கால்வாய் பணியை இழுத்தடித்து வந்த கான்ட்ராக்டருக்கு, நகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளில் வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை மூலம் கோடப்பமந்து பிரதான கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. நகரிலிருந்து, 3 கி.மீ., துாரம் உள்ள சுத்திகரிப்பு நிலையம் வரை, இருப் புறம் கால்வாய் தடுப்பு சுவர் இடிந்துள்ளது. கழிவுநீர் செல்லும் பாதையில் தேங்கியுள்ள சகதியால், மழையின் போது குடியிருப்புக்குள் தண்ணீர் செல்வதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.கோடப்பமந்து பிரதான கால்வாயில் உள்ள சகதிகளை முழுவதும் துார்வாரி, ராட்சத குழாய் அமைத்து கழிவுநீரை குழாய் வழியாக வெளியேற்ற, 5.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தனியாரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. இப்பணிக்காக ராட்சத குழாய்கள், கட்டுமான பொருட்கள் ஆங்காங்கே இறக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கான்ட்ராக்டர் பணிகளை தாமதப்படுத்தி கொண்டு முடிக்காமல் உள்ளார். இந்நிலையில், பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X