குப்பை அளிக்காதவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆபத்து

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் துாய்மை பணியாளர்களிடம், குப்பை கொடுக்காதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள 87 ஆயிரத்து 418 வீடுகளில் இருந்து தினசரி 175 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.மாநகராட்சி துாய்மை பணியை மேற்கொண்டதால் 1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள்

திருவொற்றியூர் : வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் துாய்மை பணியாளர்களிடம், குப்பை கொடுக்காதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள 87 ஆயிரத்து 418 வீடுகளில் இருந்து தினசரி 175 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.மாநகராட்சி துாய்மை பணியை மேற்கொண்டதால் 1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொய்வின்றி குப்பையை அகற்றினர்.குப்பைக்கு வரும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி கழிவுகளில் பாத்திரம் கழுவும் பவுடர் தயாரித்தல், பழைய துணிகள் விற்பனை என, புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

வீடுதோறும் குப்பையை பிரித்து வழங்கும் பழக்கத்தை கொண்டுவர, துாய்மை பணியாளர்கள் முயற்சி செய்தனர். சிலர், தரம் பிரிக்காமல் வீதியில் குப்பையை கொட்டியதால், வீட்டு சேகரிப்பின் போது குப்பை கொடுக்காதவர்கள் எண்ணிக்கையை சரியாக கணக்கெடுத்து, அவர்களை எச்சரித்து, குப்பையை பிரித்து வழங்க அறிவுறுத்தினர்.எச்சரிக்கை இதனிடையே, சில மாதங்களுக்கு முன், தனியாரிடம் துாய்மை பணி ஒப்படைக்கப்பட்டதால், ஆரம்பம் முதல் பல குளறுபடி நிலவுகிறது. முக்கிய சந்திப்புகளில் அளவுக்கு அதிகமான குப்பை கொட்டப்பட்டு, குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது.

சில இடங்களில் குப்பைத் தொட்டி இல்லை. ஒரு சில இடங்களில் இருந்தும் பயனில்லை. வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் தனியார் துாய்மை பணியாளர்கள், பல தெருக்களில், காலை 10:00 மணிக்கு மேல் தான் வருகின்றனர்.ஊழியர்கள் எண்ணிக்கை பாதிக்கும் குறைவு என்பதால், வேலை பளு இரட்டிப்பாக உள்ளதாக, காரணம் கூறப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்வோர் குப்பையை வீட்டில் தேக்கி வைத்து, அதில் புழுக்கள் உருவாகின்றன.

வேறு வழியின்றி, நாட்கணக்கில் தேங்கும் குப்பையை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி, முக்கிய சந்திப்புகளில் கொட்டிச் செல்கின்றனர். அது, மலை போல் குவிந்து விடுகிறது. ஊழியர்களின் இந்த தாமதத்தால், வீட்டு சேகரிப்பின் போது குப்பை கொடுக்காதவர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குப்பை அளிக்காதோர் எண்ணிக்கையை குறைக்க, காலை 9:00 மணிக்குள் வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை முடிக்கும் வகையில், ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். குப்பை வழங்காதவரை கணக்கெடுத்து, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால், தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X