மீனவர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்| Dinamalar

மீனவர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்

Added : ஆக 23, 2021
Share
எண்ணுார் : எண்ணுார், புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில், மீனவர் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில், தத்ரூப ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.சென்னை, எண்ணுார், தாழங்குப்பத்தில், புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில் தற்காலிகமாக அம்மா உணவகம் செயல்படுகிறது.இக்கட்டடத்தில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் வண்ணம் பூசப்பட்டு, அழகிய ஓவியங்கள் வரையும் பணி நடக்கிறது.திருவொற்றியூர்
 மீனவர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்

எண்ணுார் : எண்ணுார், புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில், மீனவர் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில், தத்ரூப ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சென்னை, எண்ணுார், தாழங்குப்பத்தில், புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில் தற்காலிகமாக அம்மா உணவகம் செயல்படுகிறது.இக்கட்டடத்தில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் வண்ணம் பூசப்பட்டு, அழகிய ஓவியங்கள் வரையும் பணி நடக்கிறது.திருவொற்றியூர் மண்டல அதிகாரி பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் அறிவுறுத்தல்படி, மீனவ கிராமங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால், மீனவர் வாழ்வியல் சார்ந்த ஓவியங்கள், இங்கு தத்ரூபமாக வரையப்பட்டு வருகின்றன.

இந்த ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.எர்ணாவூர் முருகன் கோவில் - மகாலட்சுமி நகர் இணைப்பு சுரங்கப்பாதையிலும் ஓவியங்கள் வரையும் பணி துவங்கப்பட உள்ளது. படிப்படியாக மண்டலம் முழுதும் இப்பணிகள் நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாசர்பாடி: சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.இதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதமாக மூர்த்திங்கர் குடியிருப்பில் நடக்கும், தீவிர துாய்மைப் பணியையும், சுவரில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணியையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.சென்னை மாநகரின் பசுமை பரப்பளவை அதிகரியக்கும் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வளாகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை நட்டனர்.நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X