பொது செய்தி

தமிழ்நாடு

மாசடைந்தது மாமாங்கம் ஓடை துார்வாரி சுத்தப்படுத்த எதிர்பார்ப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மாமாங்கம் ஓடையை துார்வாரி, துாய்மைப்படுத்த வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டின் குறுக்கே, மாமாங்கம் ஓடை அமைந்துள்ளது. அரசம்பாளையம், சொலவம்பாளையம், குமாரபாளையம் மற்றும் எட்டிக்குட்டை பகுதியில் மழை பெய்யும்போது, மாமாங்கம் ஓடைக்கு நீர் வரத்து ஏற்படும்.பிளாக்
 மாசடைந்தது மாமாங்கம் ஓடை துார்வாரி சுத்தப்படுத்த எதிர்பார்ப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மாமாங்கம் ஓடையை துார்வாரி, துாய்மைப்படுத்த வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டின் குறுக்கே, மாமாங்கம் ஓடை அமைந்துள்ளது. அரசம்பாளையம், சொலவம்பாளையம், குமாரபாளையம் மற்றும் எட்டிக்குட்டை பகுதியில் மழை பெய்யும்போது, மாமாங்கம் ஓடைக்கு நீர் வரத்து ஏற்படும்.பிளாக் மாரியம்மன், கரியகாளியம்மன் கோவில் திருவிழாவின் போது, சுவாமி கங்கைக்கு புறப்படுதல், பூவோடு எடுத்தல், அம்மன் அழைப்பு, தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த ஓடையில் நடந்தன.கார்த்திகை மாதங்களில் மாலையிடும் ஐயப்ப பக்தர்கள், இந்த ஓடையில் காலை மற்றும் மாலை நேரங்களில் குளித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஓடையில், கோழிகளின் இறைச்சி கழிவுகள் வீசப்பட்டு, கழிவுநீரும் கலப்பதால், மக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. இதனால், புனிதமான ஓடை மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, மாமாங்கம் ஓடை சுத்தமாக காட்சி அளித்தது. பேரூராட்சி நிர்வாகம் ஓடையை துார்வாரி, சுத்தம் செய்வதை கைவிட்டது. இதனால், நீரோடை அசுத்தமாகி, புதர் மண்டி காட்சி அளிக்கிறது.மாமாங்கம் ஓடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பேரூராட்சி நிர்வாகமும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலையை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X