சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி அருகே, அரசு பெண் ஊழியரிடம் செயின் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 53; மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர். கடந்த 18ம் தேதி பல்லவன் சாலையில் நடந்து சென்ற இவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூவர், ௧.௫ சவரன் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி அருகே, அரசு பெண் ஊழியரிடம் செயின் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 53; மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர். கடந்த 18ம் தேதி பல்லவன் சாலையில் நடந்து சென்ற இவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூவர், ௧.௫ சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித், 22, சேப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 19, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வம் என்பவர் தேடப்பட்டு வருகிறார்; நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X