பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... ஆபத்தான மரத்தை வெட்டுங்க!

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன், நுாலகம் அமைந்துள்ளது. நுாலகத்துக்கு வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், நுாலகத்துக்கு முன், பழமையான மரம் ஒன்று, எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால், நுாலகத்துக்கு வரும் வாசகர்களுக்கும், பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணிகளுக்கும் போதிய
 செய்திகள் சில வரிகளில்... ஆபத்தான மரத்தை வெட்டுங்க!

வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன், நுாலகம் அமைந்துள்ளது. நுாலகத்துக்கு வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், நுாலகத்துக்கு முன், பழமையான மரம் ஒன்று, எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால், நுாலகத்துக்கு வரும் வாசகர்களுக்கும், பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும், பாதுகாப்பான முறையில் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

தடுப்பூசிக்கு முன்னறிவிப்பு தேவை

பொள்ளாச்சி கிராமப்பகுதி மக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக, ஊரக ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஊசி போடப்படுகிறது.எங்கு முகாம், எத்தனை 'டோஸ்' ஊசிகள் போடப்படும் என்ற விபரம், அந்தந்த நாள் காலையில் தான் அறிவிக்கப்படுகிறது.

இதனால், தகவல் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால், ஊசி போட்டுக் கொள்ள எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, முன் தினமே, எந்ததெந்த ஊர்களில் முகாம்; அங்கு எத்தனை 'டோஸ்' தடுப்பூசி ஒதுக்கீடு என்ற தகவலை, மாவட்ட நிர்வாகம் அறிவித்தால், பயனுள்ளதாக இருக்கும் என கிராமப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மரத்தில் ஏறி மிரட்டியவர் மீட்பு

பொள்ளாச்சி, ராமபட்டணம் பிரிவு அருகே, புளியமரத்தில் ஏறி, கீழே குதிப்பதாக மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி, ராமபட்டணம் பிரிவு அருகே, 20ம் தேதி இரவு, புளியமரத்தின் உச்சிக்கு ஏறிய நபர், கீழே குதிப்பதாக சப்தம் போட்டார். அங்கு இருந்த மக்கள், தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு நிலைய அலுவலர் புருேஷாத்தமன் தலைமையில், சம்பவ இடத்துக்கு சென்ற வீரர்கள், மக்கள் உதவியுடன் மரத்துக்கு கீழே வலை விரித்து காத்திருந்தனர். அதன்பின், தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மீது ஏறி, கயிறு கட்டி அந்த நபரை லாவகமாக மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ராமப்பட்டணம் பகுதியை சேர்ந்த துரையன்,55, என்பவர், மனநிலை பாதித்த நிலையில், மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்,' என்றனர்.

பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 50க்கும் குறைவான மனைப்பிரிவுகள் மட்டுமே முழுமையாக நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில், பொது உபயோகத்துக்காக, 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டுள்ளது.சில பகுதிகளில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சில மனைப்பிரிவுகளில், பொதுஒதுக்கீடு இடங்களை, தனிநபர்கள் பயன்படுத்தி வருவதாகவும், வீடுகள் மற்றும் தனியார் நிறுவன கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

தன்னார்வலர்கள் கூறுகையில், 'மனைப்பிரிவுகளில், பொது ஒதுக்கீடுக்கான நிலப்பரப்பு சரிவர கணக்கீடு செய்யப்பட வேண்டும். பொது ஒதுக்கீடு இடங்களைக் கண்டறிந்து, மறு அளவை செய்வதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்றனர்

.நீச்சல்குளம் மேம்படுத்தப்படுமா?

உடுமலை ஒன்றியத்தின் கீழ், திருமூர்த்திமலையில் நீச்சல்குளம் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், இந்த வளாகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீச்சல்குளம், உடைமாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.உடுமலை ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சுவர், பெண்கள் உடைமாற்றும் அறை, தரைத்தளத்தை பொலிவு படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி கிடையாது. முறையான அனுமதி கிடைத்தால், நீச்சல்குளம் வளாக கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

விதிமீறி பிளக்ஸ் பேனர் அமைப்பு

பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க, அரசு தடை விதித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரால், வால்பாறை நகரில் அதிக அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சுவர்களில் பல்வேறு கட்சியினர் விளம்பரம் செய்துள்ளனர். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ், நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

விதிமுறையை மீறி அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், நெடுஞ்சாலைத்துறை சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''பள்ளி வளாக, வகுப்பறைகள், தளவாடப் பொருட்களை சுத்தம் செய்யவும், 'சிங்க்' மற்றும் வைட்டமின் மாத்திரைகளை போதியளவு இருப்பு வைக்க தலைமையாசிரியர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகளில் குழு அமைத்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X