சிறுமி பலாத்கார வழக்கு; தந்தையின் ஜாமின் உச்சநீதிமன்றம் ரத்து

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-ராஜஸ்தானில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு படித்த மகளை பாலியல்பலாத்காரம் செய்த தந்தை மீது 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் கைதான அவருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமின்

புதுடில்லி-ராஜஸ்தானில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news


ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு படித்த மகளை பாலியல்பலாத்காரம் செய்த தந்தை மீது 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் கைதான அவருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமினை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. முடிவில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமினை ரத்து செய்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பாலியல் வழக்கின் விசாரணை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நீண்ட நாள் நடக்கும் என்ற அடிப்படையில், உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.


latest tamil news



ஆனால் விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பிலான சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் வரையிலாவது நீதியின் நலன் கருதி குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைப்பது அவசியம்.எனவே குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வாரத்திற்குள் சரண் அடைய வேண்டும். அவர் மீதான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் துவங்கும் என, அரசு தரப்பு கூறி உள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanaraman - Chennai,இந்தியா
23-ஆக-202108:43:58 IST Report Abuse
Kalyanaraman நம் நாட்டில் எந்த வழக்கையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாமலிருப்பது நீதிமன்றங்களுக்கு கடிவாளம்/ சுய ஒழுக்கம் இல்லை என்பதை காட்டுகிறது. இந்த அவல நிலை என்று தீருமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X