பொது செய்தி

தமிழ்நாடு

திறப்புக்கு தயாராகும் தியேட்டர்கள்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை : சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதியளித்ததை அடுத்து, கிருமி நாசினி தெளித்து துாய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுதும் ஏப்ரல் முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது, தமிழக அரசு அளித்துள்ள தளர்வில், இன்று முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.அதன்படி, தியேட்டர்களில் சமூக இடைவெளியை
 திறப்புக்கு தயாராகும் தியேட்டர்கள்

சென்னை : சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதியளித்ததை அடுத்து, கிருமி நாசினி தெளித்து துாய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுதும் ஏப்ரல் முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது, தமிழக அரசு அளித்துள்ள தளர்வில், இன்று முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.அதன்படி, தியேட்டர்களில் சமூக இடைவெளியை பின்பற்றி இன்று முதல் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதனால், எந்த பராமரிப்பும் இல்லாமல் ஐந்து மாதங்களாக மூடியே வைக்கப்பட்டிருந்த தியேட்டர்களை துாய்மைப்படுத்தி, எலக்ட்ரானிக் சாதனங்கள், மின் விளக்குகள் உள்ளிட்டவற்றை பராமரிக்கும் பணியில், தியேட்டர் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. வடபழநியில் உள்ள தியேட்டர்களில், ஊழியர்கள் சமூக இடைவெளிக்காக, இருக்கைகளின் இடையே தடுப்பு அமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X