நிரம்பும் நிலையில் ஆழியாறு அணை! உபரி நீரை பயன்படுத்த திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பும் நிலையில் ஆழியாறு அணை! உபரி நீரை பயன்படுத்த திட்டம்

Added : ஆக 23, 2021
Share
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், உபரி நீரை குளங்கள் மற்றும் தடுப்பணைகளில் நிரப்பி பயன்படுத்த, பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி, ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள மாநில பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகா பகுதி

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், உபரி நீரை குளங்கள் மற்றும் தடுப்பணைகளில் நிரப்பி பயன்படுத்த, பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி, ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள மாநில பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகா பகுதி விவசாயம், ஆழியாறு அணையை நம்பியே உள்ளது. மேலும், அணையில் இருந்து, 13 கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது. கடந்த, 18ம் தேதி அணையின் மொத்த உயரமான, 120 அடியில், 115.55 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. நான்கு நாட்களில், நான்கு அடி நீர் மட்டம் உயர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, 119.10 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,214 கனஅடி நீர் வரத்தும், 362 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், உபரி நீரை பயன்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.செயற்பொறியாளர் நரேந்திரன் கூறியதாவது:ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், உபரி நீரை புதிய ஆயக்கட்டு பாசனத்தின் பொள்ளாச்சி கால்வாய் வாயிலாக, கம்பாலபட்டி, அங்கலக்குறிச்சி பகுதிகளில் உள்ள தடுப்பணைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அணையில் இருந்து ஆனைமலை குளப்பத்து குளம், குப்புச்சிபுதுார் குளம் மற்றும் சமத்துார் எலவக்கரை உள்ளிட்ட குளங்களில் நீர் நிரப்பப்படும். இதனால், 1,300 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். இதனால், முன்கூட்டியே, இரு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து, நீர்மட்டம், வெளியேற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X