பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியாக தரம் உயர்கிறது தாம்பரம்?

Added : ஆக 23, 2021
Share
Advertisement
தாம்பரம் : 'தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது' என, தாம்பரம்,எம்.எல்.ஏ., - எஸ்.ஆர்.ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு, சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை புறநகரில் உள்ள, தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.புறநகர் பகுதிகள்

தாம்பரம் : 'தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது' என, தாம்பரம்,எம்.எல்.ஏ., - எஸ்.ஆர்.ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு, சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகரில் உள்ள, தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, தாம்பரம் நுழைவாயிலாக இருப்பதுடன், இதை சுற்றிய பகுதிகளில், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதே இதற்கு காரணம்.சென்னை மாநகராட்சி எல்லை, 176 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்ட பின், 2019ல் ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது; தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயரவில்லை.இதை வலியுறுத்தி, 10 ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள், அரசுக்கு பல்வேறு வகையிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்ற பின், உடனடியாக மாநகராட்சி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு தாமதமானதால், சமூக ஆர்வலர்கள் பலர், ஏமாற்றம் அடைந்திருந்தனர்.இந்நிலையில், நேற்று, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள, முழு நேர கிளை நுாலகத்தில், புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து, தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா பேசுகையில், ''தாம்பரம், மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்லும் விதமான அறிவிப்பு, விரைவில் வெளிவர உள்ளது,'' என்றார்.எம்.எல்.ஏ.,வின் இந்த பேச்சு, தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயருமா, இல்லையா என்பதில், இதுவரை இருந்து வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மாநகராட்சியாக தரம் உயரவுள்ள தாம்பரத்தில், தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளை தவிர, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் இணைய உள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட உள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது. தரம் உயர்த்தப்பட்டபின், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிப்பதுடன், புதிதாக மாநகராட்சியுடன் இணையும் பகுதிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நீர்நிலைகளை புனரமைத்து, பாதுகாக்க வேண்டும். தரமான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் கிடைக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்.பி.விஸ்வநாதன், 63,சிட்லபாக்கம், சமூக ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X