பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடிக்கு உதவ பரவலாக பெய்த மழை: ஓடையாக மாறிய நகர ரோடுகள்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உடுமலை:பருவமழையால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகள், நிரம்பி, மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்காச்சோளம், பருத்தி உட்பட சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.சமவெளிப்பகுதிகளில், போதியளவு மழை பெய்யாத நிலையில், பாசனத்தில், நீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், உடுமலை பகுதியில், நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது.
 சாகுபடிக்கு உதவ பரவலாக பெய்த மழை: ஓடையாக மாறிய நகர ரோடுகள்

உடுமலை:பருவமழையால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகள், நிரம்பி, மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்காச்சோளம், பருத்தி உட்பட சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.சமவெளிப்பகுதிகளில், போதியளவு மழை பெய்யாத நிலையில், பாசனத்தில், நீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், உடுமலை பகுதியில், நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. சாகுபடி பணிகளை துவக்கியுள்ள நிலையில், மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை நகரில், மழையால், முக்கிய ரோடுகளில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கழுத்தறுத்தான் பள்ளத்தில், மழை நீர் செல்ல வழியில்லாமல், பழநி ரோட்டில் அதிகளவு தேங்கி நின்றது.இதனால், அவ்வழியாக செல்ல முடியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறினர். இதே போல், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் கழிவு நீர் கலந்து பொள்ளாச்சி ரோட்டில், வெளியேறியது.தளி ரோடு சிக்னலில் இருந்து மாரியம்மன் கோவில் வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. கனமழைக்கு முன், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மடத்துக்குளத்தில், இரு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இப்பகுதியில், 71 மி.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X