பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அதெல்லாம் ஒரு காலம்!

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'பார்லிமென்டில் விவாதங்கள் இன்றி சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது வருத்தமளிக்கிறது' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியுள்ளார்.மேலும் அவர், 'நாடு சுதந்திரம் அடைந்து லோக்சபா, ராஜ்யசபா அமைக்கப்பட்டபோது
இது, உங்கள், இடம், ithu, ungal, idam


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பார்லிமென்டில் விவாதங்கள் இன்றி சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது வருத்தமளிக்கிறது' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியுள்ளார்.மேலும் அவர், 'நாடு சுதந்திரம் அடைந்து லோக்சபா, ராஜ்யசபா அமைக்கப்பட்டபோது அதில் இடம் பெற்றவர்கள் பெரும்பாலும் சட்டத்துறையை சேர்ந்தோர்.'அப்போதெல்லாம் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போது, அவை மக்களை எப்படி பாதிக்கும் என விரிவான விவாதங்கள் நடக்கும்' என கூறியுள்ளார்; உண்மை தான்! அது ஒரு பொற்காலம்!

அன்றைய கால கட்டத்தில் சபை நாகரிகம் தெரிந்த பண்பாளர்கள், பார்லிமென்ட் உறுப்பினர்களாக இருந்தனர்.மறுப்பு சொல்வதை கூட, நாசுக்காக பிறர் மனம் நோகாதபடி எடுத்துரைத்தனர். மக்கள் நலன் ஒன்றே முக்கியம் என்பதை மனதில் நிறுத்தி விவாதங்கள் நடந்தன.

இன்று அப்படியான நிலைமையா உள்ளது?சாத்தானின் ஆலோசனை கூடமான, 'பாண்டிமோனியம்' போல் அல்லவா, பார்லிமென்ட் நடக்கிறது.எதற்கெடுத்தாலும் கூச்சல், போராட்டம், கூப்பாடு, 'மைக்' உடைப்பு, காகிதம் கிழிப்பு, சபாநாயகர் மேஜை மீதேறி ஆர்ப்பாட்டம்... இதெல்லாம் போதாதென்று, மிகவும் அநாகரிகமாக, 'விசில்' வேறு அடிக்கின்றனர்.இந்த மாதிரி, 'விசிலடிச்சான் குஞ்சுகளை' நாட்டின் மிக உயர்ந்த இடத்துக்கு ஓட்டு போட்டு அனுப்பி வைத்துள்ள நாம் வெட்கப்பட வேண்டும்.ஒரு நாளைக்கு எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து, இந்த இரு சபைகளும் கூட்டப்படுகின்றன என்பது, உறுப்பினர்கள் அறியாததா?


latest tamil news


எந்த செயல்பாடும் இன்றி சபைகள் முடக்கப்படுகின்றனவே என்ற வருத்தமோ, மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறதே என்ற கவலையோ, இந்த மனசாட்சி இல்லாத உறுப்பினர்களுக்கு கிடையாது.இவர்களின் ரவுடித்தனத்தை பார்த்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் வடித்துள்ளார் என்றால், இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

ஆரோக்கியமாக விவாதங்களை முன்வைத்து கலந்துரையாடினால், சபையின் கவுரவம் காக்கப்படும்.ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, ராஜாஜியைப் பார்த்து, 'மெஜாரிட்டி என் பக்கம்' என்றார். அதற்கு உடனே ராஜாஜி, 'இருக்கலாம்... ஆனால் நியாயம் என் பக்கம் அல்லவா இருக்கிறது' என பதிலடி கொடுக்க, சபையே கலகலப்பானது.பார்லிமென்டில், அப்படிப்பட்ட உரையாடல் எல்லாம் காணாமலே போய்விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
23-ஆக-202114:11:13 IST Report Abuse
Rajas அந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் கேட்டால் பதில் சொல்வதற்கு ஆளும் கட்சியில் திறமை மிக்க நல்ல தலைவர்கள் இருந்தார்கள். இப்போது கேள்வி கேட்டால் அந்த கேள்வியை புரிந்து கொள்வதற்கு கூட திறமையான அமைச்சர்கள் அல்லது எம்பிக்கள் ஆளும் கட்சியில் இல்லை. ராகுல் அதிகமாக கடன் வாங்கிய 50 பேர்கள் யார் யார் என்று கேட்க அதற்கு நிர்மலா சீதாராமனின் பதில் சொன்னது அந்த வகை தான். கடன் வாங்கிய நபர்களின் பெயரை சொல்லாமல் Write off, Waived off என்று கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் சொன்னார்.
Rate this:
Cancel
கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம் எதிர் கட்சிகள் என்றால் எதற்கெடுத்தாலும் விவாதம் செய்து சபையை நடத்த விடாமல் செய்பவர் என்று பொருள் அல்ல. ஆளும் கட்சியினரும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு செவி சாய்க்க வழி செய்தால் சட்டசபை மற்றும் ராஜ்யசபையின் மாண்புகள் காப்பாற்றப்படும். காசை கொடுத்து ஓட்டு வாங்கி எம். எல். ஏ வோ எம். பி யோஆனவர்களிடம் நாம் சபை நாகரீகத்தை எதிர்பார்ப்பது நமது மடமை அன்றி வேறென்ன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் ஆனவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்வதற்கு முன்னால் அந்த இருக்கையில் தமக்கு முன் அமர்ந்த தேசத்திற்காக தொண்டாற்றியவர்களை பற்றியும் அவர்களுடைய தன்னலமற்ற சேவையைப் பற்றியும் கற்றுணர்வது அவசியம். நன்றி
Rate this:
Cancel
23-ஆக-202110:59:09 IST Report Abuse
ஆரூர் ரங் சீனா ரஷ்யா வுக்காக பார்லிமெண்டில் குரல் கொடுத்து கொண்டிருந்த😡 கம்யூனிஸ்டுக்கு பதிலாக இப்போ சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அவர்களது அடிமைகளாக காங்கிரசு புனிதமான மக்களவையில் அநாகரிக கலாட்டா செய்கிறார்கள். 176000000000 போல சம்பாதிக்க வாய்ப்பு குறைந்த ஆத்திரத்தில்தான் திமுக வும் குறை (குரை🙃😉,)க்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X