வருவாய் கோட்டத்தில் 25 பேருக்கு கொரோனா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 25 பேருக்கு கொரோனா

Added : ஆக 23, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சியில், மரப்பேட்டை வீதி, ஆண்டிகவுண்டர் வீதி, சி.டி.சி., காலனி, மகாலிங்கபுரம் ராமலிங்கர் வீதி ஆகிய பகுதிகளில், நேற்று, ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தெற்கு வட்டாரம், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளியில் தலா ஒருவர் என இரண்டு பேர்; வடக்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சியில், மரப்பேட்டை வீதி, ஆண்டிகவுண்டர் வீதி, சி.டி.சி., காலனி, மகாலிங்கபுரம் ராமலிங்கர் வீதி ஆகிய பகுதிகளில், நேற்று, ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தெற்கு வட்டாரம், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளியில் தலா ஒருவர் என இரண்டு பேர்; வடக்கு ஒன்றியம் பனிக்கம்பட்டியில் இரண்டு பேர், ஆர்.பொன்னாபுரம், புரவிபாளையத்தில் தலா ஒருவருக்கு என நான்கு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.* கிணத்துக்கடவு தாலுகாவில், கல்லாங்காட்டுப்புதுார், கிணத்துக்கடவு, கோவில்பாளையம், சென்றாம்பாளையம், வடசித்துார் பகுதியை சேர்ந்த, ஏழு பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது.* ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, ஒடையகுளம், அங்கலக்குறிச்சி, கணபதிபாளையம், சமத்துவபுரம், கரியாஞ்செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.* வால்பாறை கோ - ஆபரேட்டிவ் காலனியில் நேற்று முன்தினம், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அரசு கலைக்கல்லுாரி கொரோனா கேர் சென்டரில், ஐந்து பேர் சிகிச்சை பெறுகின்றனர்.வருவாய் கோட்டத்தில், நேற்று, 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தவர்கள் வீடுகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவர்களுடன் இருந்த குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X