பொது செய்தி

தமிழ்நாடு

பாசன பகுதியில் கரும்பு நடவு பணி: விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உடுமலை:ஏழு குளங்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன பகுதியில், கரும்பு நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., பாசனம் நான்கு மண்டலமாக விரிவு படுத்தப்படும் முன்பு, கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. உற்பத்தியான கரும்பு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பி.ஏ.பி., பாசனம் நான்கு மண்டலமாக
 பாசன பகுதியில் கரும்பு நடவு பணி: விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு

உடுமலை:ஏழு குளங்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன பகுதியில், கரும்பு நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., பாசனம் நான்கு மண்டலமாக விரிவு படுத்தப்படும் முன்பு, கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. உற்பத்தியான கரும்பு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பி.ஏ.பி., பாசனம் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு, சாகுபடி பரப்பு வெகுவாக சுருங்கி, தற்போது, உடுமலை வட்டாரத்தில், ஏழு குள பாசன பகுதிகளில் மட்டும், சாகுபடியாகி வருகிறது.குறிப்பாக, செங்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம், செட்டிகுளம் உட்பட குளங்களில் இருந்து நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களில் மட்டும், கரும்பு சாகுபடி செய்யப்பட்டு, வெல்லம் தயாரிப்புக்காக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஏழு குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவ்வகையில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, ஆக., 3ல் தண்ணீர் திறக்கப்பட்ட போது, தளி கால்வாய் வழியாக, ஏழு குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, இப்பாசன பகுதியில், கரும்பு சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.நடவுக்காக பராமரிக்கப்பட்ட விளைநிலங்களிலிருந்து ஒரு கரணை, ஒரு ரூபாய் என்ற விலையில், வாங்கி வந்து நடவு பணிகளை துவக்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: தமிழக அரசு, வேளாண் பட்ஜெட்டில், கரும்பு பிழிதிறனை அதிகரிக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்ட செயலாக்கம் அனைத்து பகுதிகளிலும், சீராக கிடைக்க செய்ய வேண்டும். கொள்முதல் விலையையும் உயர்த்தி, அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த சீசனில், வெல்லத்துக்காக விற்பனை செய்யப்படும் கரும்புக்கும், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.இடுபொருட்களை விலையை கட்டுப்படுத்தி, தொழில்நுட்ப உதவிகளை, வேளாண்துறை வாயிலாக கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X