பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் தனிநபர்கள் ஆதிக்கம் :நடவடிக்கை பாயுமென எச்சரிக்கை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:ஊராட்சி அலுவலகங்களில், அரசால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், தவிர, வேறு யாரும் பணியில் இருக்கக்கூடாது என, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் உள்ள, கிராம ஊராட்சிகளில், தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சியை சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி

கிணத்துக்கடவு:ஊராட்சி அலுவலகங்களில், அரசால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், தவிர, வேறு யாரும் பணியில் இருக்கக்கூடாது என, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் உள்ள, கிராம ஊராட்சிகளில், தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சியை சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி வகிக்கின்றனர்.ஊராட்சி அலுவலகங்களில், அரசால் நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலர், சுகாதார பணியாளர், வாட்டர்மேன் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.இவர்கள் தவிர, ஊராட்சிக்கு தொடர்பில்லாத சிலர், அலுவலகங்களில் பணியாற்றுவதாகவும், அவர்களை சந்தித்த பிறகே, ஊராட்சி தலைவர்களை சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், மக்கள் பெரிதும் பாதிப்பதாகவும், கலெக்டர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆகியோருக்கு புகார் சென்றது.இதனை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், ஊராட்சி அலுவலகங்களில், அரசால் நியமிக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர, வேறு யாரும் ஊராட்சி அலுவலகத்துக்குள் பணியில் இருக்கக்கூடாது.உத்தரவை மீறி பணியாற்றுவது தெரியவந்தால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ன் படி நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாதேவி, அனைத்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் பி.டி.ஓ.,க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X