சம்பவம் செய்தி

தமிழ்நாடு

க்ரைம் செய்திகள்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில், கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் லாட்டரி சீட்டு விற்பதை கண்டுபிடித்து விசாரித்தனர். அவர், மோதிராபுரத்தை சேர்ந்த அரவிந்தன்,28, என்பதும், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது. போலீசார், அவரை கைது செய்து, 570 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.பெண்ணை மிரட்டியவர் கைதுவால்பாறை,

பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில், கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் லாட்டரி சீட்டு விற்பதை கண்டுபிடித்து விசாரித்தனர். அவர், மோதிராபுரத்தை சேர்ந்த அரவிந்தன்,28, என்பதும், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது. போலீசார், அவரை கைது செய்து, 570 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பெண்ணை மிரட்டியவர் கைது

வால்பாறை, பன்னிமேடு எஸ்டேட் தொழிலாளி செல்வராணி.42. இவர், தேயிலை பறிக்கும் பணிக்கு சென்று, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த பிரதீப் குமார், 21, என்பவர், அவரை காரில் அழைத்து சென்றார்.வீடு அருகே கார் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த தொழிலாளி, பிரதீப்குமார் கையை கடித்ததார். இதனால் ஆத்திரமடைந்த அவர், செல்வராணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த பிரதீப்குமாரை கைது செய்தனர்.கொலை மிரட்டல்; இருவர் கைதுவால்பாறை, மளுக்கப்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர், வீட்டிற்கு நடந்து சென்றபோது, செக்போஸ்ட் அருகே, போதையில் இருந்த இருவர், ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து, ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த மணிவண்ணன்,37, பாலமுருகன்,44, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விபத்தில் பெண் பலி
நெகமம், வடசித்துாரை சேர்ந்தவர் மணிமேகலை, 27. இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த, ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். கடந்த, 18ம் தேதி, நெகமத்தில் இருந்து, குருநல்லிபாளையத்துக்கு உறவினர் செந்தில்குமாருடன் பைக்கில் சென்றார்.வாய்க்கால் மேடு அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகே உள்ள பி.ஏ.பி., கால்வாய்க்குள் விழுந்தது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மணிமேகலை இறந்தார். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

போக்சோவில் சிறுவன் கைது

ஆனைமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுவன், அதே கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியை, காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், சிறுவனும், சிறுமியும் ஊரில் இருந்து மாயமானார்கள். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் தேடிப்பிடித்தனர்.விசாரணையில், சிறுவன், அச்சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிய வந்ததால், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுவனை கைது செய்துள்ளனர்.காதல் கைகூடாததால் தற்கொலைபொள்ளாச்சி அடுத்துள்ள பனமரத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்,25, தனியார் நிறுவன பணியாளர். இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் காதலை ஏற்றுக் கொள்ளாமல், வேறொரு பெண்ணுடன் நிச்சயம்செய்துள்ளனர்.காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் மனமுடைந்த ரஞ்சித்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் விபத்து; ஒருவர் பலி

பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் சிற்பி நகரை சேர்ந்தவர் சத்தியசீலன், 42, கணினி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் தொழில் செய்கிறார்.இவர் நேற்று முன்தினம், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், பைக்கில் மோதியதில், தலையில் அடிபட்டு சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கார் ஓட்டிய, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜன் என்பவரை, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

குழியில் சிக்கி சிறுவன் பலிஉடுமலை அருகேயுள்ள குரல் குட்டை, பாலாஜி பெஸ்ட் பைபர் கம்பெனியில், அதே பகுதியை சேர்ந்த, முத்துச்சாமி மகன் கேசவன்,14, வேலை செய்ந்து வந்தார்.கடந்த, 20ம் தேதி, வேலை செய்து கொண்டிருந்த போது, தேங்காய் 'காயர்பித்' குழியில் விழுந்து, நீரில் மூழ்கி பலியானார்.இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உரிமையாளர் கந்தர்மணி, மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X