பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கையில் அசத்தும் பல்லாவரம் நகராட்சி பள்ளி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பல்லாவரம் : பல்லாவரம் நகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கையில் அசத்தி வருகிறது. பல்லாவரம் நகராட்சியில், ஜமீன் பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் அருகே நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது.திரிசூலம், கீழ்க்கட்டளை, பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழி கொண்ட இப்பள்ளியில், மாணவர்களுக்காக கண்காணிப்பு கேமரா, செயல்வழி கற்றல்,

பல்லாவரம் : பல்லாவரம் நகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கையில் அசத்தி வருகிறது.
பல்லாவரம் நகராட்சியில், ஜமீன் பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் அருகே நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது.திரிசூலம், கீழ்க்கட்டளை, பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழி கொண்ட இப்பள்ளியில், மாணவர்களுக்காக கண்காணிப்பு கேமரா, செயல்வழி கற்றல், இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட வசதிகள் உள்ளன.படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

கராத்தே, கேரம், யோகா, பரத நாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.குறிப்பாக, கராத்தே போட்டியில், இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.இங்கு படிக்கும் மாணவர்கள், கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் அசத்தி வருவதால், தங்களது குழந்தைகளை சேர்க்க, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2019ல், முகநுால் மூலம் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேர்க்கையை அதிகரித்தனர்.

இந்நிலையில், கொரோனா காலத்திலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.இதன் பயனாக, மாணவர் சேர்க்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த கல்வியாண்டில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, இதுவரை, 452 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது, கடந்தாண்டை விட அதிகமாகும்.தற்போது, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, 960 ஆக உயர்ந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,000த்தை தொடும் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சரை அழைத்து விழா நடத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X