பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை நீரூற்று புனரமைப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அண்ணா நகர் : அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பிரதான சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.சென்னையை அழகுபடுத்த மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது, பொது இடங்களில் சுவர்களில் கண்ணைக் கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அதுமட்டுமின்றி, முக்கிய சாலை
 செயற்கை நீரூற்று  புனரமைப்பு

அண்ணா நகர் : அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பிரதான சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

சென்னையை அழகுபடுத்த மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது, பொது இடங்களில் சுவர்களில் கண்ணைக் கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அதுமட்டுமின்றி, முக்கிய சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டு, பழுதடைந்து இருந்த செயற்கை நீரூற்று அனைத்தையும் புனரமைத்து, மக்களை கவரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதில், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட நியூ ஆவடி சாலை-, மூன்றாவது அவென்யூ சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்று புனரமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X