பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறையில் தொடரும் குழப்பம்: தெளிவுபடுத்துமா அரசு?

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை-'அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்களால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்களை தீர்க்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.விண்ணப்பங்கள்தமிழகத்தில், அங்கீ காரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது.இதில், 'ஆன்லைன்' முறையில்

சென்னை-'அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்களால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த குழப்பங்களை தீர்க்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.விண்ணப்பங்கள்தமிழகத்தில், அங்கீ காரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது.இதில், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள் பதியும் பணி, 2019 நவம்பர் 3ல் முடிந்தது.விண்ணப்பித்த மனைகள் உள்ள, 'லே - அவுட்'டில் இருக்கும்மற்றவர்கள், டி.டி.சி.பி.,அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.மற்றவர்கள், கூடுதல்கட்டணம் செலுத்தினால் வரன்முறை வாய்ப்பு வழங்கப்படும்.இருப்பினும், டி.டி.சி.பி., மாவட்ட அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்களில் வரன்முறை விண்ணப்பங்கள் நிலுவையில் போடப்படுகின்றன.

இதனால், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக, மனை என்ற விபரத்தை மறைத்து, நில விற்பனை என பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு டி.டி.சி.பி., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.முத்திரை தீர்வைஇது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:மனை வரன்முறை தொடர்பாக, சமீபகாலமாக வெளியாகும் சில தகவல்கள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.'தற்போது அமலில் இருக்கும் 11 சதவீத முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்துடன், கூடுதலாக, 3 சதவீத தொகை செலுத்தி அங்கீகாரமில்லாத மனையை பதிவு செய்யலாம்' என்ற ஒரு தகவல் முதலில் பரவியது.

அடுத்து, பதிவுத்துறை தலைவர், நகர் - ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., இயக்குனர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மனை வரன்முறை மேற்கொள்ளப்படும் என, மற்றொரு தகவல் பரவுகிறது.அங்கீகாரமில்லாத மனை வரன்முறைக்கு என, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் குழு அமைக்க திட்டம் என்றும் தகவல் வருகிறது. இதில், எதை நம்புவது என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு தலையிட்டு, இதில் உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த வேண்டும்; அப்போது தான் குழப்பம் தீரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X