அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வீடியோ' ஆதாரம் அ.தி.மு.க., வெளியீடு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை,-கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான சையன், மனோஜ் மற்றும் பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைப்பது பற்றி பேசிய 'வீடியோ' ஆதாரம் வெளியாகி உள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களா உள்ளது. இதில், 2017 ஏப்., 24ல், காவலாளி ஓம் பகதுார் என்பவர் கொல்லப்பட்டு,

சென்னை,-கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான சையன், மனோஜ் மற்றும் பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைப்பது பற்றி பேசிய 'வீடியோ' ஆதாரம் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களா உள்ளது. இதில், 2017 ஏப்., 24ல், காவலாளி ஓம் பகதுார் என்பவர் கொல்லப்பட்டு, கொள்ளை நடந்தது. இந்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சையன், மனோஜ் உள்ளிட்டோர் கைதாகி, ஜாமினில் உள்ளனர். இவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, சட்டசபையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சட்டசபை முன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில், பழனிசாமியை சிக்க வைக்க, சையன், மனோஜ் மற்றும் பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர் நடத்திய உரையாடல் வீடியோ, சமூக வலைதளமான 'டுவிட்டரில்' நேற்று அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X