மழை நீரில் கொசு உற்பத்தி கட்டுப்படுத்த ஆயில் பந்து| Dinamalar

மழை நீரில் கொசு உற்பத்தி கட்டுப்படுத்த 'ஆயில் பந்து'

Added : ஆக 23, 2021
Share
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், மழை நீர் தேங்கியுள்ள காலி மனைகளில் கொசு உற்பத்தியை கட்டுபடுத்த, நகராட்சி சார்பில், 'ஆயில் பந்து' போடப்படுகிறது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. நாள்தோறும், 103 டன் குப்பை சேகரமாகிறது. இந்நிலையில், வார்டுகள் தோறும் முறையாக குப்பை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.இதையடுத்து, துாய்மை பணி முடுக்கி
 மழை நீரில் கொசு உற்பத்தி கட்டுப்படுத்த 'ஆயில் பந்து'

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், மழை நீர் தேங்கியுள்ள காலி மனைகளில் கொசு உற்பத்தியை கட்டுபடுத்த, நகராட்சி சார்பில், 'ஆயில் பந்து' போடப்படுகிறது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. நாள்தோறும், 103 டன் குப்பை சேகரமாகிறது.

இந்நிலையில், வார்டுகள் தோறும் முறையாக குப்பை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.இதையடுத்து, துாய்மை பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நாள்தோறும், ஒரு வார்டை தேர்வு செய்து, அந்த வார்டில், முழு சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தெருக்கள் தோறும் குப்பையை அள்ளி, 'பிளிச்சிங் பவுடர்' போடுதல், கொசு புகை அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

மற்றொரு புறம், 42 வார்டுகளிலும், காலி மனைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.இதனால், துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் முயற்சியாக, காலி மனைகளில், 'ஆயில் பந்து' போடும் பணியும் நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X