பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் சிறுவர்களுக்காக கோட்டூர்புரத்தில் பூங்கா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோட்டூர்புரம் : கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறன் சிறுவர் - சிறுமியர் பயன்படுத்தும் வகையில், 2.23 கோடி ரூபாயில் அமைக்கப்படும் சிறப்பு பூங்கா, அடுத்த மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அடையாறு மண்டலம், 172வது வார்டு, கோட்டூர்புரம் ஒன்றாவது குறுக்கு தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில், 26 ஆயிரம் சதுர அடி பரப்பில், 2.23 கோடி ரூபாயில், மாற்றுத்திறன்

கோட்டூர்புரம் : கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறன் சிறுவர் - சிறுமியர் பயன்படுத்தும் வகையில், 2.23 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

சிறப்பு பூங்கா, அடுத்த மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அடையாறு மண்டலம், 172வது வார்டு, கோட்டூர்புரம் ஒன்றாவது குறுக்கு தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில், 26 ஆயிரம் சதுர அடி பரப்பில், 2.23 கோடி ரூபாயில், மாற்றுத்திறன் சிறுவர்- - சிறுமியருக்கான சிறப்பு பூங்கா அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.கொரோனா பாதிப்பால், பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு நவம்பரில் பூங்கா பணி துவங்கியது. மாற்றுத்திறன் சிறுவர்கள் விளையாடும் வகையில், சறுக்கு மரம், ஊஞ்சல், தரையில் விழுந்தால் அடிபடாதவாறு ரப்பர் தளம், சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் வசதியுடன் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், பூங்கா நுழைவாயிலில், பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தொட்டால் உணரக் கூடிய பூங்கா வழிகாட்டி, மூலிகை தோட்டம், பேசும் குழாய், பாரம்பரிய விளையாட்டுகள், மூங்கில் இசை, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.அதேபோல், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தற்போது, 98 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.அனைத்து பணிகளையும் முடித்து, அடுத்த மாதம் பூங்காவை திறக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X