மினி பஸ் வழித்தட நிறுத்தங்களில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மினி பஸ்' வழித்தட நிறுத்தங்களில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை

Added : ஆக 23, 2021
Share
கிண்டி : கிண்டியில், மினி பஸ் வழித்தடங்களில் உள்ள நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, மினி பஸ் இயக்கப்படுகிறது. கொரோனா முதல் அலையில் நிறுத்தப்பட்ட இந்த பஸ், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது.கிண்டியில் இருந்து, மடுவாங்கரை, நேரு நகர், அம்பேத்கர் நகர், வீட்டுவசதி

கிண்டி : கிண்டியில், மினி பஸ் வழித்தடங்களில் உள்ள நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, மினி பஸ் இயக்கப்படுகிறது. கொரோனா முதல் அலையில் நிறுத்தப்பட்ட இந்த பஸ், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது.கிண்டியில் இருந்து, மடுவாங்கரை, நேரு நகர், அம்பேத்கர் நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, விரைவு சாலை, விஜய நகர் வழியாக, வேளச்சேரி ரயில் நிலையம் செல்கிறது.இரண்டு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பஸ் இயக்குவதால்,

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.ஆனால், எந்த நேரத்தில் பஸ் வரும் என தெரியாமல், பயணியர் குழப்பம் அடைகின்றனர். பஸ் வரும் நேரம் தெரியாததால், ஆட்டோ உள்ளிட்டவற்றை பிடித்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறுகின்றனர். இதனால், மினி பஸ் வழித்தட நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X