மின்சாரம் பாய்ந்து விபத்து கேபிள் ஆப்பரேட்டர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து விபத்து 'கேபிள் ஆப்பரேட்டர்' பலி

Added : ஆக 23, 2021
Share
மதுரவாயல் : மதுரவாயல் அருகே மின்சாரம் பாய்ந்து 'கேபிள் ஆப்பரேட்டர்' ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.குன்றத்துார், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35; தனியார் நிறுவன 'கேபிள் ஆப்பரேட்டர்'. நேற்று முன்தினம் இரவு, வானகரம், செட்டியார் அகரம் அருகே பள்ளம் தோண்டி கேபிள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக, மின்சார கேபிளை

மதுரவாயல் : மதுரவாயல் அருகே மின்சாரம் பாய்ந்து 'கேபிள் ஆப்பரேட்டர்' ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குன்றத்துார், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35; தனியார் நிறுவன 'கேபிள் ஆப்பரேட்டர்'. நேற்று முன்தினம் இரவு, வானகரம், செட்டியார் அகரம் அருகே பள்ளம் தோண்டி கேபிள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக, மின்சார கேபிளை தொட்டதில், துாக்கி வீசப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் இறந்த தகவல் தெரிய வந்தது. இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X