புதராக மாறிய சுடுகாடு அடக்கம் செய்வதில் தவிப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : குரோம்பேட்டை, பாரதிபுரம் சுடுகாடு புதராக மாறி, உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலைமையில் உள்ளது.பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, பாரதிபுரத்தில் சுடுகாடு உள்ளது. பாரதிபுரம், மாணிக்கம் நகர், பெரியார் நகர், குமரபுரம், ராதா நகரின் ஒரு பகுதி மக்கள், பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சுடுகாட்டை, நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. இதனால்,
 புதராக மாறிய சுடுகாடு அடக்கம் செய்வதில் தவிப்பு

குரோம்பேட்டை : குரோம்பேட்டை, பாரதிபுரம் சுடுகாடு புதராக மாறி, உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலைமையில் உள்ளது.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, பாரதிபுரத்தில் சுடுகாடு உள்ளது. பாரதிபுரம், மாணிக்கம் நகர், பெரியார் நகர், குமரபுரம், ராதா நகரின் ஒரு பகுதி மக்கள், பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சுடுகாட்டை, நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து, காடுபோல் மாறிவிட்டது. மற்றொரு புறம், முறையான அறிவிப்பு பலகை, மின் விளக்கு, சரியான பாதை போன்ற வசதிகள் இல்லை.அருகே, மாடு வளர்ப்பவர்கள், சாணம் கொட்டும் இடமாக சுடுகாட்டை மாற்றி விட்டனர்.

இதனால், உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இரவில், உடல்களை அடக்க செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், மின் விளக்கு இல்லாததாலும், பாம்பு தொல்லையாலும் சிரமப்படுகின்றனர். உடல்களை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் இஷ்டத்திற்கு பணம் வாங்குவாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, நகராட்சியில் புகார் தெரிவித்தும், சுடுகாட்டை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கிராமப் புறங்களில் கூட சுடுகாட்டை முறையாக பராமரிக்கும் நிலையில், சென்னை மாநகரை ஒட்டியுள்ள, பல்லாவரத்தில் புதர் மண்டி காடாக இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நகராட்சி அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு, சுத்தம் செய்து, பராமரிக்க முன்வர வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X