பொது செய்தி

தமிழ்நாடு

எம்.டி.சி.,யில் ஐ.டி.ஐ., பயிற்சி விண்ணப்பிக்க வரும் 30 கடைசி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழக ஐ.டி.ஐ., பயிற்சி மைய மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குரோம்பேட்டையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இதில், 1,252 மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு, அரசு

சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழக ஐ.டி.ஐ., பயிற்சி மைய மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குரோம்பேட்டையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இதில், 1,252 மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, பணியாளர்களின் வாரிசுகள் போக, மீதமுள்ள 72 காலி இடங்களுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், முதல்வர், மாநகர் போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலையம், காந்தி நகர், குரோம்பேட்டை சென்னை - 44 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பெறலாம்.

மேலும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு, mtciti591@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 044 - 2953 5177; 94450 30597 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, வரும் 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X