ரேபிஸ் நோய் தாக்கியதால் பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ரேபிஸ்' நோய் தாக்கியதால் பரிதாபம்

Added : ஆக 23, 2021
Share
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் 'ரேபிஸ்' வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள், இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை கடித்துள்ளன. நாய் கடிக்கு ஆளானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷ், 7, என்ற சிறுவனையும், ஒன்றரை
  'ரேபிஸ்' நோய் தாக்கியதால் பரிதாபம்

பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் 'ரேபிஸ்' வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள், இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை கடித்துள்ளன. நாய் கடிக்கு ஆளானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷ், 7, என்ற சிறுவனையும், ஒன்றரை மாதத்திற்கு முன் வெறிநாய் கடித்துள்ளது.அதில் சிறுவனுக்கு, முகம் உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆனால் அவரது பெற்றோர் தடுப்பூசி போடாமல், அலட்சியமாக விட்டதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன், மோனிஷின் நாக்கில் திடீரென நாய்க்கு வடிவது போன்று எச்சில் வடிந்தது.மேலும், தண்ணீரை பார்த்தால் ஓடுவது என, மோனிஷின் செயல்பாடு இயல்புக்கு மாறாக காணப்பட்டது. பயந்த பெற்றோர், மோனிஷை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.வெறிநாய் கடித்ததில் ஏற்பட்ட 'ரேபிஸ்' வைரசால் மோனிஷ் பாதிக்கப்பட்டது தெரிந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று காலை மோனிஷ் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சிறுவனின் உடலை, மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.இதைத் தொடர்ந்து, 'ரேபிஸ்' நோய் தாக்கி இறந்த சிறுவனின் எச்சில் பட்டால் மற்றவர்களுக்கும் அந்நோய் பரவும் என்பதால், சிறுவனின் பெற்றோர் மற்றும் யார், யாருடன் சிறுவன் பழகினான் என்பதை கணக்கெடுத்து, தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நிர்வாகம் அலட்சியம்பூந்தமல்லி, அகரமேல் ஊராட்சியில், வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அவற்றை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் பிடித்து செல்ல வேண்டும் என, பொதுமக்கள் அடிக்கடி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் ஊராட்சி நிர்வாகம் இன்னும் அலட்சியமாக உள்ளது.இந்நிலையில், 7 வயது சிறுவன் வெறிநாய் கடிக்கு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.'விழிப்புணர்வு அவசியம்'இது குறித்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் எழிலரசி கூறியதாவது:வெறிநாய் கடித்ததும், சிறுவனுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி போடாமல் நாட்டு மருந்தை கொடுத்துள்ளனர். இதனால் தான் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கியுள்ளது.

ரேபிஸ் நோய் வந்தால், பாதிக்கப்பட்டோர், அதிக சத்தம் போடுவர். அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக கோபம் வரும். பின், நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படும். அதுபோல் தான் சிறுவனுக்கும் ஏற்பட்டுள்ளது.ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனி, நாய் கடித்ததும், முதலில் கடிபட்ட இடத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பின்னர், ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X