பொது செய்தி

தமிழ்நாடு

'ஆதி திராவிட பள்ளிகளை கல்வி துறையுடன் இணைக்க கூடாது'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை : 'ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது' என, சமூக சமத்துவ படை தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி கூறியுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:'ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்; வருவாய்த் துறை தனி வட்டாட்சியர்கள் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்க

சென்னை : 'ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது' என, சமூக சமத்துவ படை தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:'ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்; வருவாய்த் துறை தனி வட்டாட்சியர்கள் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்க வேண்டும்' என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால், ஆதி திராவிடர் பள்ளிகளை, பள்ளிக் கல்விக்கு மாற்றுவதால், ஆதி திராவிடர் நலத் துறையில் உள்ள சிறப்பு அதிகாரங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை, பள்ளிக் கல்வித்துறையே நிரப்பும் அதிகாரம் பெறும் வாய்ப்புள்ளது.அவ்வாறு அதிகாரம் கொடுக்கப்பட்டால், தற்போது100 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களில், ஆதி திராவிடர் அல்லாதோரை பணியமர்த்தும் நிலை வரலாம்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 100 சதவீத வேலைவாய்ப்பும் முற்றிலும் பறிபோகும்.ஏற்கனவே,

கடந்த 10 ஆண்டுகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல், பின்னடைவு இடங்களாக உள்ளன.ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளை, பள்ளிக் கல்வியுடன் இணைக்க முயன்றார். அப்போது, பல்வேறு சமூக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.எனவே, ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளை, கல்வி துறையுடன் இணைக்கக் கூடாது. மாறாக, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை தரம் உயர்த்துவது, புதுமைப்படுத்துதல், கூடுதல் பள்ளிகளை ஏற்படுத்துதல், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற பணிகளை, அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பள்ளிக் கல்வி துறை போன்று, வட்டார, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், துணை, இணை இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகள் அடங்கிய நிர்வாக அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X